Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து கோயில் சொத்துக்கள்: திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் எடப்பாடி பழனிச்சாமி! குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

இந்து கோயில் சொத்துக்கள்: திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் எடப்பாடி பழனிச்சாமி! குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

இந்து கோயில் சொத்துக்கள்: திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் எடப்பாடி பழனிச்சாமி! குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 6:04 AM GMT


இந்து கோவில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க எடப்பாடி பழனிச்சாமி அரசு அரசாணை வெளியிட்டது. இது திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி ஆகும். அதைத்தான் இப்போது நிறைவேற்ற ஜெயலலிதா வழியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி துடியாய் துடிக்கிறார்.


இதனை எதிர்த்து சேலம் கன்னன்குறிச்சி யை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.


இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.


இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-


தமிழக அரசின் அரசாணை மூலமாக தமிழகத்தில் உள்ள இந்து கோவில் சொத்துக்களை விற்க தமிழக அரசு வற்புறுத்துகிறதh? அரசின் இந்த உத்தரவு மூலம் கோயில்களுக்கு என்ன பயன்? தமிழக அரசின் ஊதுகுழலாகவும், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இயங்குகின்றனர்.


இந்து அறநிலையத்துறையின் கீழ், தமிழகத்தில் 38,000 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக எவ்வளவு நிலங்கள் உள்ளன? அந்த நிலங்களில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில் நிலங்களில் எவ்வளவு நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன? அவற்றில் எவ்வளவு நிலங்களுக்கு குத்தகைகள் வசூலிக்கப்படுகின்றன? இதுபோன்ற விபரங்களை முதலில் வெளியிட வேண்டும். இந்த விவரங்கள் இல்லாமல் எப்படி அரசாணையை அமல்படுத்த முடியும்?


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அரசு மீது அடுக்கடுக்கான பல கேள்விகளை தொடுத்து உள்ளனர்.


திமுகவின் தேர்தல் வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி ஏன் நிறைவேற்றத் துடிக்கிறார்? இதன் பின்னணியில் என்ன நடந்தது? எதற்காக எடப்பாடி பழனிச்சாமி இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார்?


இப்படி தமிழக இந்துக்கள் மனதிலும் அடுக்கடுக்கான பல கேள்விகள் எழுந்து உள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News