Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்க உதவும் வரலாற்று சிறப்புமிக்க சுரங்கப்பாதை - நிதின் கட்காரி நேரில் ஆய்வு !

காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் ஆசியாவிலேயே உயரமான சுரங்கப்பாதை பணிகளை நிதின் கட்காரி நேரில் ஆய்வு செய்தார. இப்போது காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்க உதவும் என்று அவர் கூறினார்.

காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்க உதவும் வரலாற்று சிறப்புமிக்க சுரங்கப்பாதை - நிதின் கட்காரி நேரில் ஆய்வு !
X

KarthigaBy : Karthiga

  |  11 April 2023 10:00 AM GMT

குளிர்காலங்களில் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை பனியால் மூடப்பட்டு விடும். இதனால் காஷ்மீரில் இருந்து லடாக் துண்டிக்கப்பட்டு விடும். இதை கருத்தில் கொண்டு அனைத்து வானிலைகளின்போதும் பயணம் செய்வதற்காக கந்தர் பால் மாவட்டம் பல்டாலில் இருந்து லடாக்கின் மினிமார்க் வரை 13 கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது . இதற்கு சோஷிலா சுரங்கப்பாதை என்று பெயர்.


தரைமட்டத்திலிருந்து 11,578 அடி உயரத்தில் இப்பாதை கட்டப்படுகிறது. ரூபாய் 8000 கோடி செலவிடப்படுகிறது. இது ஆசியாவிலேயே உயரமான இடத்தில் கட்டப்படும் நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி 13 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற ஆலோசனை குழுவுடன் நேற்று அங்கு நேரில் சென்றார். 11,578 அடி உயரத்தில் நடந்து வரும் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


சுரங்க பாதையின் 38% பணிகள் முடிவடைந்துள்ளன. மைனஸ் 26 டிகிரி வெப்ப நிலையில் இங்கு கஷ்டப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். சுரங்க பாதையின் ஒரு பகுதி இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும் .காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்க வேண்டும் என்ற கனவின் ஒரு அங்கம் தான் இந்த சுரங்கப்பாதை. இந்திய வரலாற்றில் இது முக்கியமான வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும். சுற்றுலா பெருகும் .அதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். சுவிட்சர்லாந்து போன்று சொகுசு விடுதிகளையும் சாகச விளையாட்டுகளையும் இங்கு தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News