விமான சேவை தொடங்கட்டும். அப்போ இருக்கு! 960 வெளிநாட்டு தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்கள் நாடு கடத்தப்படுகின்றனரா.? அமித் ஷா அதிரடி!
விமான சேவை தொடங்கட்டும். அப்போ இருக்கு! 960 வெளிநாட்டு தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்கள் நாடு கடத்தப்படுகின்றனரா.? அமித் ஷா அதிரடி!

இந்தியாவில் இருக்கும்போது மிஷனரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் விசா நிபந்தனைகளை மீறியதற்காக மத்திய உள்துறை அமைச்சகம், 960 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களின் சுற்றுலா விசாக்களை தடுப்புப்பட்டியலில் வைத்து ரத்து செய்தது.
இந்த வெளிநாட்டு தப்லீஹி ஜமாஅதிகள் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின் விதிகளை மீறியதற்காக, 500 டாலர் அபராதம் செலுத்திய பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
இது குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா கூறுகையில், "960 வெளிநாட்டவர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் சுற்றுலா விசாக்கள் தப்லிகி நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் கண்டறிந்த பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
வெளிநாட்டினர் சட்டம், 1946 ; மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 இன் விதிகளை மீறியதற்காக 960 வெளிநாட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபிக்கள் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்புப்பட்டியல் உத்தரவு அவர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கும். இந்த 960 வெளிநாட்டு தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்கள் சர்வதேச விமான சேவை தொடங்கும் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள். சர்வதேச விமானங்கள் மீண்டும் தொடங்கும் போது நாடு கடத்தப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் முடிவில் சர்வதேச விமானங்கள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் தடுப்பு மையங்களுக்கு மாற்றப்படலாம். அரசாங்க அறிக்கையின்படி, இதுவரை 9000 க்கும் மேற்பட்ட தப்லீகி ஜமாஅத் பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களின் முதன்மை தொடர்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.