தலைசுற்றல் போன்ற பிரச்சினைகளை தடுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் !
Remedies to prevent dizziness
By : Bharathi Latha
தலைச்சுற்றல் பிரச்சினையை எந்த ஒரு நபரும் தன் வாழ்வின் ஏதாவது ஒரு நிலையில் அனுபவிக்க நேரிடுகிறது. தலைச்சுற்றல் உண்டாகும் போது மூளை தன் சமநிலையை இழந்து தலைச் சுழலத் தொடங்குகிறது, இதன் விளைவாக மயக்கம் ஏற்படுகிறது. இது மோசமான உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். சில சமயங்களில் குறைந்த இரத்த அழுத்தம், இதய நோய், தசை பலவீனம், ஒவ்வாமை, இரத்த சோகை, தலையில் உண்டான காயம், ஒற்றைத் தலைவலி, உடலின் சர்க்கரை அளவு அதிகரித்தல், பக்கவாதம், காதுகளில் உண்டான தொற்று, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைச்சுற்றல் உண்டாகிறது. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாளும், சில மருந்துகளின் பக்க விளைவுகளாளும் தலைச்சுற்றல் உண்டாகும்.
தேகத்தில் தண்ணீர் போதிய அளவில் இல்லாததே தலைச்சுற்றலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு, தலைச்சுற்றல் போன்ற அபாயத்தைக் குறைக்கிறது. பெரும்பாலும் மயக்கம் உண்டாகும் நேரங்களில் சத்தான உணவுகளை சாப்பிடுவது நன்மை அளிக்கிறது. இரத்த சோகையைத் தடுக்க இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். இரத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறையும் போது தலைச்சுற்றலை ஏற்படுகிறது, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இதனால் தலைச்சுற்றல் உண்டாகும்.
நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் பற்றாக்குறையாலும் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. எனவே, வயிற்றை எப்போதும் காலியாக இருக்க விடாதீர்கள் மற்றும் நாள் முழுவதும் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ஏதாவது ஒரு உணவை உண்ணுங்கள். தலைச்சுற்றல் அடிக்கடி உண்டானால் வாழைப்பழம், தயிர் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். சில சமயங்களில் முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் அல்லது சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுவதும் தலைச்சுற்றலைக் குறைக்க உதவுகிறது. தலைச்சுற்றல் பிரச்சினையை குறைக்க ஆம்லா பெரிதும் உதவுகிறது. பண்டையக் காலத்திலிருந்தே தலைச்சுற்றல் சிகிச்சைக்கு ஆம்லா பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஆம்லா உட்கொள்வதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும், இரத்த ஓட்டமும் மேம்படுத்துகிறது, இது தலைச்சுற்றலையும் தடுக்கிறது.
Input & image courtesy:Logintohealth