Kathir News
Begin typing your search above and press return to search.

துரித உணவுகளால் ஏற்படும் இந்த நிலையை சரி செய்வது எப்படி?

Safety measures for constipation

துரித உணவுகளால் ஏற்படும் இந்த நிலையை சரி செய்வது எப்படி?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 July 2021 2:00 PM GMT

இன்றைய நாகரீக காலங்களில் ஃபாஸ்ட்புட் என்று அழைக்கப்படும் துரிதமாக மற்றும் ஆரோக்கியமே இல்லாத உணவை அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கல் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் ஆகும். மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலே மிகவும் அசௌகரியமாக, சங்கடமான உணர்வு ஏற்படும். சில நேரங்களில், இது உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் மற்றும் மன அமைதிக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.


வயதானவர்களுக்கு அதிகமாக இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட சில வழிகள். மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடலில் ஏற்படும் நீரிழப்பு. எனவே, நீரிழப்பை எவ்வாறு தவிர்ப்பது? அதிகமாக நீராகாரங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் தான். இது மலச்சிக்கலுக்கான எளிய இயற்கை வைத்தியம் ஆகும். தினமும் உடல் செயல்பட தேவையான அளவுக்கு போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


பால் மற்றும் நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியவை. அதே நேரத்தில், மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபட சிறந்த பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகவும் செயல்படுகின்றன. எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது உங்கள் செரிமான அமைப்பைத் தூண்ட உதவுகிறது மற்றும் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். மேலும் அத்திப் பழங்கள் சாப்பிடுவது இது போன்ற சமயங்களில் நல்ல பலனைக் கொடுக்கும். எனவே ஃபாஸ்ட்புட்டை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவதற்கு முடிந்தவரை கவனம் செலுத்த வேண்டும்.

Source From: https://www.seniority.in/blog/15-natural-home-remedies-for-constipation/

Image courtesy: Wikipedia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News