அடக்கு முறையை ஏவி விடும் கம்யூனிஸ்ட்டுகள் - சீனாவிடமிருந்து விட்டால் போதும் சாமி என்று ஓட துடிக்கும் ஹாங்காங் : தேர்தல் முடிவு காட்டிய அறிகுறி!
அடக்கு முறையை ஏவி விடும் கம்யூனிஸ்ட்டுகள் - சீனாவிடமிருந்து விட்டால் போதும் சாமி என்று ஓட துடிக்கும் ஹாங்காங் : தேர்தல் முடிவு காட்டிய அறிகுறி!
By : Kathir Webdesk
ஹாங்காங் இல் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில் சீன எதிர்ப்பு ஜனநாயக ஆதரவு கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மாகாண சபை தேர்தல் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றாலும் சில மாதங்களாக ஹாங்காங் இல் நடைபெற்று வரும் சீன எதிர்ப்பு போராட்டங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் அடக்குமுறைகளும் இந்த தேர்தல் வெற்றியை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியிருக்கிறது.
ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதிதான் என்றாலும் நிர்வாக ஆட்சியுரைகளில் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியாக உள்ளது. 1997 இல் பிரிட்டனின் காலனியாக இருந்து பிறகு சீனாவுடன் சேர்த்து கொள்ளப்பட்டது. சீனாவின் மற்ற பகுதிகளை காட்டிலும் அடிப்படை உரிமைகள் மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் ஹாங்காங் சீனாவின் இரும்பு பிடியிலிருந்து விலகி இருக்கிறது என்ரே சொல்லலாம். சில மாதங்களுக்கு முன் சீன அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்ட மசோதாவால் ஹாங்காங் இல் போராட்டம் வெடித்தது.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்த பலர் தாக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் . சீன அரசாங்கம் தயார் செய்திருக்கும் சட்ட மசோதாவின் படி குற்ற நடவடிக்கைகளில் சந்தேகிக்கப்படும் நபரை ஹாங்காங் ஐ விட்டு வெளியேற்றி சீனாவின் பிரதான பகுதிக்கு கொண்டு சென்று விசாரிக்க வலி செய்கிறது. இந்த சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது.
இந்த சட்டம் கடந்த செப்டம்பர் மதம் வாபஸ் பெறப்பட்ட போதும் சீன அரசாங்கத்திற்கும் ஹாங்காங் மக்களுக்கும் இடையேயான உரசல் கொதி நிலையை அடைந்து பெரும் பகையாக உருமாறி உள்ளது. ஒக்டோபர் ஒன்றாம் தேதி சீன அரசு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய 70 ஆவது ஆண்டை கொண்டாடிய போது ஹோங்க்கிகொங்கில் பெரும் வன்முறை வெடித்து சிலர் கொல்லப்பட்டனர். சீன அரசின் கைப்பாவையாக செயல்படும் கேரி லிம் பதவி விலகவும் தற்போது உள்ள தேர்வு முறையை அதாவது சீன கம்யூனிச கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தான் ஹாங்காங் இல் பதவிக்கு வருபவர்களை தேர்ந்தெடுக்க முடியும். இந்த முறையை மாற்றி பொது வாக்குரிமையை நடைமுறைப்படுத்தவும் கோரிக்கை வலுத்து வருகிறதுவருகிறது. இந்த கோரிக்கைக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆதரவு பெருகி வரும் நிலையில் தற்போதையிற் மாகாண சபை தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.