Kathir News
Begin typing your search above and press return to search.

'140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கௌரவம்' - அமெரிக்காவில் கெத்து காட்டும் மோடி...!

வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க இந்திய தேசிய கீதங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கௌரவம் - அமெரிக்காவில் கெத்து காட்டும் மோடி...!

KarthigaBy : Karthiga

  |  23 Jun 2023 6:30 AM GMT

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நியூயார்க் நகரில் ஐ.நா தலைமையகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அதை முடித்துக்கொண்டு தலைநகர் வாஷிங்ன்னுக்கு சென்றார். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனுடன் அவருடைய மனைவி ஜில் பைடனும் சிறப்பு விருந்தளித்தனர். ஜில் பைடன் ஏற்பாட்டில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார்.


பின்னர் ஜோபைடனுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்குச் சென்றார். பாரம்பரிய வரவேற்பு அளித்தார். 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இரு நாடு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவருடைய கணவர் டாக்எம் ஹாப் ஆகியயயோரும் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :-


ஜனாதிபதி ஜோபைடனுன் ஜில்பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரவேற்பு "140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கௌரவம்" அமெரிக்காவில் உள்ள 40 லட்சம் இந்தியர்களுக்கும் பெருமை. ஜனநாயக மாண்புகள் அடிப்படையில் அமெரிக்காவும் இந்தியாவும் கட்டமைக்கப்பட்டுள்ளன.பன்முகத்தன்மையில் பெருமை கொள்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண மனிதனாக அமெரிக்கா வந்தேன். அப்போது வெள்ளை மாளிகையை வெளியில் இருந்து பார்த்தேன்.


பிரதமரான பிறகு பல தடவை வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளேன். முதல் முறையாக இவ்வளவு அதிகமான இந்தியர்களுக்கு வெள்ளை மாளிகை கதவு திறக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். பிராந்திய சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிப்பேன். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமையும் என்று நம்புகிறேன். உலக நன்மைக்காகவும் அமைதி நிலைத்தன்மை மற்றும் வளமைக்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி கொண்டு உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


ஜோபைடன் பேசும்பொழுது அமெரிக்க இந்திய உறவு 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் சிறப்பான உறவுகளில் ஒன்று. இன்று இரு நாடுகளும் எடுக்கும் முடிவு இனிவரும் தலைமுறைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ரஷ்ய போர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இவ்வாறு ஜோபைடன் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News