Kathir News
Begin typing your search above and press return to search.

அம்பானி, அதானி எப்படி வளர்ந்தார்கள்.? புள்ளிவிவரங்கள் உடைத்த இரகசியம் - சுக்கு நூறாக உடைக்கப்பட்ட இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளின் விமர்சனம்!

அம்பானி, அதானி எப்படி வளர்ந்தார்கள்.? புள்ளிவிவரங்கள் உடைத்த இரகசியம் - சுக்கு நூறாக உடைக்கப்பட்ட இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளின் விமர்சனம்!

அம்பானி, அதானி எப்படி வளர்ந்தார்கள்.? புள்ளிவிவரங்கள் உடைத்த இரகசியம் - சுக்கு நூறாக உடைக்கப்பட்ட இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளின் விமர்சனம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Nov 2019 12:58 PM IST


இடதுசாரிகளை பொறுத்தவரையில் பொருளாதாரம் மந்தமாக உள்ளது, ஆனால் அம்பானி, அதானிக்கு அரசு உதவுவதால் அவர்கள் வளர்கின்றனர். இது தான் காலம் காலமாக அவர்கள் சொல்லி வரும் புராணம். ஒரு துறையில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் கணிக்கும் வித்தையை அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் போல. ஒரு தொழில் எப்படி வளர்ச்சி காண்கிறது என்பதே தெரியாமல் வாதங்களை முன்வைக்கின்றனர். தற்போது மாற்று எரிசக்தியை நோக்கி பயணிக்க உலக நாடுகள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளன. அந்த துறையில் அதானி நிறுவனம் கவனம் செலுத்தி வருவதால், கணிசமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் இடதுசாரிகளின் கண்களுக்கு அரசு ஊற்றி வளர்ப்பது போல மட்டுமே தெரியும்.


அதானி குழுமத்தைச் சேர்ந்த ‘அதானி க்ரீன் எனர்ஜி’ (Adani Green Energy limited) என்ற மரபுசாரா எரிசக்தி நிறுவனம், கடந்த 9 மாதங்களில் மட்டும் 200 சதவிகித அளவிற்கு லாபமீட்டியுள்ளது.


2019-20 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 102 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிஇருக்கிறது. அதேபோல, முந்தைய 2018 - 19 நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வருவாய் 449 கோடி ரூபாயாக இருந்துள்ளது.


இது தற்போது 2019-20 நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில் 53.5 சதவிகிதம் அதிகரித்து, 689 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் எபிட்டாவும் (Earnings before interest, tax, depreciation and amortisation - EBITDA) 94.4 சதவிகிதம் அதிகரித்து 382 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2018 - 19 நிதியாண்டின் இரண்டாவது காலாண் டில் 196 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.எபிட்டா தொகை மட்டுமல்ல, எபிட்டா மார்ஜினும் 55.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.


முந்தைய ஆண்டில் எபிட்டா மார்ஜின் 43.8 சதவிகிதமாக மட்டுமே இருந்த நிலையில், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும், மின்சார தயாரிப்பினால் வரும் வருமானம் 3 சதவிகிதம் அதிகரித்து 462 கோடியைத் தொட்டுள்ளது.


மேலும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், கடந்த ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகமாக, செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 970 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.


இந்த சாதகமான அம்சங்களால், ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவன பங்குகளின் விலையும் 99 ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.கடந்த 2019 பிப்ரவரியில் அதானிக்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை வெறும் 30 ரூபாய். ஆனால், இன்று அதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 99 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. சுமார் 9 மாத காலத்துக்குள், அதானிக்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின்பங்கு விலை 200 சதவிகிதம் விலைஅதிகரித்து இருக்கிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News