Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படவில்லை!

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படவில்லை.

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படவில்லை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 Dec 2021 12:30 AM GMT

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் இங்கு பாதிக்கப்படவில்லை மேலும் அவர்கள் இங்கும் துன்புறுத்த படவும் இல்லை என்று Firstpost செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியா குறிப்பாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாடு இங்கு பல்வேறு மதங்கள் மற்றும் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் தங்களை சகோதர, சகோதரிகளாக பார்க்கிறார்கள். மேலும் அனைவரும் இந்தியர் என்ற ஒரே உணர்வு தான் இங்கு மேலோங்கி இருக்கிறது.


மிக முக்கியமாக, "இந்தியாவில் கிறிஸ்தவர்கள் ஆபத்தில் உள்ளனர்" மற்றும் 'கர்நாடகாவில் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு நல்ல நேரம் இல்லை' போன்ற அறிக்கைகள் கிறிஸ்தவ சமூகத்திற்கு உதவவில்லை என்பதை சர்ச் தலைவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். மாறாக, அது பயத்தை பரப்புகிறது மற்றும் இந்தியாவில் அவர்களின் கிறிஸ்தவ நம்பிக்கைகளை வாழ்வதில் உதவியற்ற உணர்வை வலியுறுத்துகிறது. மேலும் இப்படிப்பட்ட அறிக்கைகள் மூலம், சர்ச் தலைவர்கள் நரேந்திர மோடி தலைமையிலான BJP அரசாங்கத்தை குறிவைக்கிறார்கள். இது இந்து பெரும்பான்மை அரசியல் கட்சியாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால், நியாயமாகப் பார்த்தால், பிரதமர் மோடியும், BJP-வும் பிரச்சினை அல்ல. இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையிலான ஒற்றுமையின்மைக்கு உண்மையான தூண்டுதலாக மதமாற்றம் உள்ளது.


இந்து மத நம்பிக்கைகள், இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே வளர்ந்து வரும் மோதலுக்கான காரணம் மதமாற்றம். பெரும்பாலும் கட்டாய மதமாற்றம் ஆகும். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய 9 மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவில் மதமாற்றங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளை கட்டுக்குள் வைத்திருக்க இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இருந்தாலும் இதைப் பற்றி மக்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் ஒருவர் தானாக முன்வந்து தன் விரும்பும் மதத்திற்கு மாற முடியும் ஆனால் கட்டாயத்தின் பேரில் பிற மதத்திற்கு மாறுவது தான் குற்றம் என்று அரசாங்கம் கூறுகிறது. மத சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமகனின் அரசியலமைப்பு உரிமை. மற்ற குடிமக்களின் நம்பிக்கையை நீங்கள் மதிக்கும் வரை, இந்தியாவில் உங்கள் நம்பிக்கையை வாழ நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் இந்து மதத்தை மோசமாக காட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்வது இந்தியாவில் உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படுத்த உங்களுக்கு சுதந்திரம் வழங்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Input & Image courtesy: Firstpost



Next Story
கதிர் தொகுப்பு
Trending News