Kathir News
Begin typing your search above and press return to search.

பழமையான கோவிலுக்குள் நிறுத்தப்படும் வாகனங்கள்: நடவடிக்கை எடுக்குமா HR&CE துறை?

கோவிலுக்குள் நிறுத்தப்படும் வாகனங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை தமிழ்நாடு இந்து சமய துறை எடுக்குமா?

பழமையான கோவிலுக்குள் நிறுத்தப்படும் வாகனங்கள்: நடவடிக்கை எடுக்குமா HR&CE துறை?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 March 2022 1:43 AM GMT

ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் கோவில், திருவையாறு, இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தஞ்சாவூர் நகரத்திலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ. தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது இத்தலம். தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுச் செல்பவர்கள் வழியில் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்று பல ஆறுகளையும், சுற்றிலும் பசுமையான வயல் வெளிகளையும், சோலைகளையும் காணமுடியும். நீர்வளமும் நில வளமும் ஒருங்கே பெற்ற இந்தப் பகுதி பண்டைய சோழநாட்டில் சிறப்பாக விளங்கியிருக்கிறது அன்றைய காலகட்டத்தில்.



ஆனால் தற்பொழுது அத்தகைய பழமையான மொழிகளில் சுமார் 200 ஆண்டு கால பழமையான கோயில்கள் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோவில்களுக்கு வேன் மற்றும் கார் போன்ற பெரிய கனரக அனுமதிக்கப் படக் கூடாது இருந்தாலும் இத்தகைய கோவில்களில் கனரக வாகனங்களில் கோவில் உள்ளே வர அனுமதித்து, பழங்கால கோவில்களின் வீழ்ச்சிக்கு நாமே வழி கொடுப்பதற்கு சமமாக கருதப்படுகிறது.



மேலும் அதே போலும் தஞ்சாவூர் ஸ்ரீ தருமபுரம் ஆதீனம் (மடம்) நிர்வாகத்தின் கீழ் உள்ளது. 2000 ஆண்டு பழமையான இந்த கோவிலுக்குள் வாகனங்களை ஓட்டுவதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் அனுமதிப்பதில், மடமும் கோவில்களை காப்பாற்ற தவறி இருக்கிறது. எனவே பெரிய கனரக வாகனங்களில் கோவில் பார்க்கிங் செய்ய அனுமதிப்பது தவறான வழிமுறைகளில் ஒன்றாகும். எனவே கோவிலுக்குள் வாகனங்களை நிறுத்தும் நபர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Input & image courtesy: Twitter post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News