Kathir News
Begin typing your search above and press return to search.

பணத்தை பெருக்க இவரின் அருளை பெறுவது எப்படி ?

பணத்தை பெருக்க இவரின் அருளை பெறுவது எப்படி ?

பணத்தை பெருக்க இவரின் அருளை பெறுவது எப்படி ?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 April 2020 8:03 AM IST

ஒருவர் பணத்தை, செல்வத்தை அடைய வேண்டுமெனில் கடினமாக உழைக்க வேண்டும். அதுவும் தர்மத்தின் வழி உழைக்க வேண்டும். இவற்றிற்கு கூடுதலாக லஷ்மியின் கடாக்‌ஷமும், குபேரரின் அருளும் தேவை என சொல்லப்படுகிறது. லஷ்மியை வழிபடும் முறையும் அவருக்கான திருத்தலங்களும் பரவலாக இருக்கும் சூழலில், குபேரரை ஈர்க்க சாஸ்திரங்களில் சில வழிகள் சொல்லப்பட்டுள்ளன.

குபேரருக்கு உகந்த திசை வடக்கு, செய்யும் தொழில், பணம் வைக்கும் இடங்கள் வடக்கில் இருப்பது செழிப்பை தரும்.

பசு, வெண் புறா போன்றவை பணத்தின் குறியீடாக கருதப்படுகிறது. குபேர வழிபாட்டின் போது குபேரனுக்கான மந்திரத்தை சொல்ல வேண்டும் "ஓம் யக்ஷ்ய குபேராய வைஸ்ரவணாய, தான தான்யாதிபதியே தன தான்ய ஸம்ருத்திமே தேஹி தபாயஸ்வாஹா " என்கிற மந்திரத்தை எந்திரம் வைத்து பூஜை செய்து 108 முறை 72 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடனடியாக பலன்கள் கிடைக்கும்.

இந்த பூஜையை வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் தொடங்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்து பூஜை செய்ய வேண்டும் பூஜை தொடங்கும் நாள் அமாவாசையாக இருத்தல் நல்லது.

குபேரன் பாதாள லோகத்தில் வசிப்பவர் அதனால் மறைந்திருக்கும் செல்வங்கள் நம்மை தேடி வர இவரை வழிபடலாம். குபேரனின் உருவம் குள்ளமாக உடல் பெருத்த உருவமாக இருக்கும் இந்த இவரின் தோற்றத்தின் மீது மனம் வைத்து த்யானம் செய்வதால் செல்வம் சேர்க்கும் மன உறுதி அதிகரிக்கும். இந்திய மட்டுமல்லாது இவரின் இந்த உருவத்தை சீன மலேசிய, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழிபடுகிறார்கள்

குபேரன் தன் தொடையதில் கீரிபிள்ளை அமர்த்தியிருப்பார். கீரிப்பிள்ளை என்பது விஷ ஜந்துக்களை அழிக்க கூடியது. தன் பக்தர்களுக்கு ஏதேனும் தீமைகள் ஏற்பட்டால், அதனை தன் அனுக்கிரஹம் மூலம் தடுக்கும் குறியீடாகவே கீரிப்பிள்ளை பாவிக்க படுகிறது. பச்சை நிறமும், பாசிப்பயறும் குபேரருக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

இந்த முறைகளை எல்லாம் பின்பற்றுகையில் அது ஐஸ்வர்யத்தை ஈர்க்கும் அம்சமாக அமையும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்து.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News