Kathir News
Begin typing your search above and press return to search.

துரிதமாக உண்பவரா நீங்கள்…? ஆம் எனில் உங்களால் துரிதமாக செயல்படமுடிகிறதா…?

துரிதமாக உண்பவரா நீங்கள்…? ஆம் எனில் உங்களால் துரிதமாக செயல்படமுடிகிறதா…?

துரிதமாக உண்பவரா நீங்கள்…? ஆம் எனில் உங்களால் துரிதமாக செயல்படமுடிகிறதா…?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2019 11:16 AM IST


துரிதமும்,
வேகமும் இன்றைய உலகின் அடையாளம். இன்றைய உலகை துரித உலகு என அழைக்கவும், அடையாளப்படுத்தவும்
துவங்கிவிட்டோம். இன்று நமக்கு துரிதமாக இருக்கும் அனைத்தும் தேவை. அல்லது நம் அனைத்தும்
வேகமானதாக இருக்குமாறே நாம் விரும்புகிறோம்.
விரைவான கார், விரைவான போக்குவரத்து, விரைவான பணம், விரைவான புகழ், விரைவான
இன்டர்நெட் திட்டங்கள் துவங்கி நாம் உண்ணும்
உணவு வரை அனைத்திலும் துரிதத்திற்கு பிரதான இடம்.


ஆனால் இன்று
துரிதமாக நாம் உட்கொள்ளும்த துரித உணவுகள் தயாரிக்கப்படுவது தான் வேகமே தவிர, அதை உண்ணும்
மனிதர்கள் வேகமாக இயங்குவதில்லை. துரித உணவுகள் பெரும்பாலும் ஊட்டசத்தினை மையமாக கொண்டு
தயாரிக்கப்படுவதில்லை அவை ருசியை மையமாக வைத்தே
தயாரிக்கப்படுகின்றன.


இதில் பயன்படுத்தபடும் ரசாயான கலவைகள் உணவு ஜீரணமாவதை கடினமாக்குகின்றன. இது உடலில் சக்தியை
ஏற்படுத்துவதற்கு பதிலாக நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் உடலில் வியாதிகள் வர காரணமாகிறது.


அதன் காரணமாக,
உடல் சோர்வும்,உடல் பலவீனமும் ஏற்படுகிறது.
இந்த துரித உணவுகளை உண்பதால் உடலில் உருவாகும் “அமா “என்ற வேதிபொருள் சக்தி பாதைகளை தடை செய்வதோடு
ஆற்றலின் ஓட்டத்தை தடுக்கிறது. இதனாலேயே இதன் பெயர் துரித உணவு என்று இருந்தாலும் கூட
இதனை உட்கொள்ளும் மனிதர்களை இது தோய்வடைய செய்கிறது என ஆழுத்தமாக சொல்ல முடிகிறது.


ஆரோக்கியமான
துரித உணவுகள்


உடனடியாக தயாரிக்கப்பட்ட
உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் துரிதமாக தயாராகும் ஆரோக்கியமான உணவுகளை
பற்றி தெரிந்துகொள்ளுங்கள். வாழைப்பழம், ஆப்பிள்,
உலர்பழங்கள் விதைகள், முந்திரி, திராட்சை போன்ற
ஊட்டசத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் இது ஜீரணத்தை எளிமைப்படுத்தும்.


ஆயூர்வேத த்தில்
கிச்சரி என்கிற உணவு பதார்த்தத்தை மிக எளிதாகவும், வேகமாகவும் தயார் செய்ய இயலும்.
அது பீட்சா, பர்கர் போன்ற மற்ற துரித உணவுகளை விட ஊட்டசத்து மிகுந்தது. இதன் செய்முறை
மிக எளிதானது. இவ்வளவு ஏன் மிதமான சூட்டிலுள்ள பாலில் கூட சிறிதளவு ஏலக்காய் மஞ்சள்,
தேன் என ஆரோக்கிய உணவுகளை கலந்து உட்கொள்ளலாம்.


எனவே வெறும்
ருசிக்கான முக்கியத்துவத்தை மட்டுமே பாராமல், ஊட்டசத்துக்கான முக்கியத்துவத்தையும்
உணர்ந்து உணவினை உட்கொள்வோம். இதற்கு பெரிய விஞ்ஞானம் எல்லாம் தேவையில்லை சிறிது விழிப்புணர்வு
இருந்தாலே போதும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News