சோஷியல் மீடியா அதிகமா பயன்படுத்துறீங்களா? - இன்டர்நெட் டயட் மேற்கொள்வது எப்படி?
சோஷியல் மீடியா அதிகமா பயன்படுத்துறீங்களா? - இன்டர்நெட் டயட் மேற்கொள்வது எப்படி?

சில சமயங்களில் நம் வாழ்க்கை மிகவும் பரபரப்பானதாக தோன்றும். யாராவது எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல் "ரொம்ப பிஸிங்க" என்போம். உண்மையாகவே பரபரப்பாகத்தான் இருக்கிறோமோ??, நாம் சொல்லும் அந்த "பிஸி" என்ற வார்த்தைக்கு நிதர்சனத்தில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?
சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சியால் நம்மை சுற்றியும் சப்தம், தேவையற்ற இரைச்சல், நம் கவனத்தை சிதைக்க கூடிய, சிதறடிக்க கூடிய ஒலிகளால் நிரம்பியுள்ளது. தேவையற்ற இரைச்சலை அகற்றி, தேடல் நிறைந்த தருணங்களை உருவாக்குவது எப்படி? என்பதே இந்த கட்டுரை.
மின்னஞ்சல், வாட்சப், முகநூல், டிவிட்டர், வலைப்பூ, இன்ஸ்ட்டாகிராம், குறும்செய்திகள் அப்பப்பா... போதும் எனும் அளவிற்க்கு நவீன தொழில்நுட்பத்தில், சமூக வலைதளங்களில் தொலைந்து கொண்டிருக்கும் வேளையில் நம்மை அதிலிருந்து மீட்டெடுக்க சில டிப்ஸ்...
- தேவையற்ற நோட்டிப்பிகேஷனை அனைத்து விடுங்கள்
- உங்கள் சமூக வலைதள கணக்குகளை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே பார்ப்பது என்று தீர்மானித்து கொள்ளுங்கள். உங்கள் அலுவல் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில், அவசர முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் இருந்தால் இரண்டு அல்லது மூன்று முறை பார்க்கலாம். மிக குறிப்பக ஒரு அளவை வரித்து கொள்ளுங்கள்.
- மிக முக்கியமாக, உங்கள் அன்பானவர்களிடம், உறவுகளிடம் நீங்கள் சந்திக்கும் பொழுதெல்லம் நான் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே எனக்கான செய்திகளை பார்ப்பேன் என்பதை தொடர்ந்து கூறி அவர்களையும் உங்களின் ஒழுங்குமுறைக்கு பழக்கப்படுத்துங்கள்
- தேவையற்ற செயலிகளை, உங்கள் அலைபேசியில் இருந்து அழித்துவிடுங்கள்.
- தேவையற்ற வலைப்பூ, நம் வாழ்வுக்கு, வாழ்க்கைக்கும் அர்த்தம் சேர்க்காத நபர்களை, பக்கங்களை பின் தொடர்வதை நிறுத்துங்குள்.
ஒரு நாளில் சில மணி நேரங்கள் நாம் இணையத்தில் இருந்தால்... அதனால் பெறும் செய்தி மனதிற்க்கு நிறைவானதாக, சிந்தனைக்கு செரிவானதாக அமையுமாறு பார்த்து கொள்வது நம் கடமை.
இவைகளை தொடர்ந்து செய்கிறபொழுது, இவற்றை நம் பழக்கமாக வரித்து கொள்கிற போது நம் செயல்திட்டத்தில் ஒரு ஒழுங்கு முறை பிறக்கும். பல தேவையற்ற இரைச்சல்கள் குறையும் நம் கவனத்தை சிதறடிக்கிற சப்தங்கள் குறைந்தால் நமக்கான நேரங்கள் மலரும்.
உதாரணமாக, எதோவொரு வரிசையில் நிற்கும் சூழல் ஏற்படுகிறது, நண்பருக்காக காத்திருக்கிறீர்கள், உணவகங்களில் உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கிறீர்கள் இந்த நேரங்களிலெலாம் உங்கள் போன்கள் அலராது. உங்களுக்கான சில பிரத்யேக நேரங்கள் உருவாகும். நாம் வெறுமனே அமர்ந்திருக்கும் என நீங்கள் எண்ணினால் அது தவறு. நீங்காள் வெறுமனே இல்லை... உங்களுக்கான சில ஷணங்களை மிகுந்த விழிப்புணர்வோடு உருவாக்கியிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.