எலும்புகளின் ஆரோக்கியத்தை தான் உடல் பலமும் அடங்கி உள்ளதாம் !
How to protect your bones with strongly believe people?
By : Bharathi Latha
நமக்கு வயதாகும்போது, நம் வலுவான எலும்புகள் பலவீனமடையும். மேலும் வயது முதிர்ச்சி காரணமாக நம் எலும்பு அமைப்புக்கு பல சிக்கல்கள் ஏற்படும். வளர்ந்து வரும் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு கால்சியம் சத்தும், உடலில் கால்சியத்தை திறம்பட உறிஞ்சுவதற்கு வைட்டமின் D-யும் கண்டிப்பாக வேண்டும். எலும்புகளில் குறைந்த கால்சியம் கொண்ட குழந்தைகளில் ரிக்கெட் மற்றும் வயதானவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே தினமும் வெளியிலிருந்து எடுத்துக்கொள்ளும் உணவுகளின் வாயிலாக வலுவான எலும்புகளின் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
தினமும் சிறிதளவு வெண்ணெயை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாலாக் கீரை, முருங்கை கீரை போன்ற கீரை வகைகளில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் உங்கள் எலும்புகளை வலிமையாக்குகின்றன. உங்கள் தினசரி கால்சியம் தேவையில் நான்கில் ஒரு பகுதியை ஈடுகட்ட ஒரு நாளைக்கு ஒரு கப் கீரையை உங்கள் உணவுடன் சேர்த்துக்கொண்டால் போதும். வலுவான எலும்புகளுக்கு ஆற்றல் அளிக்க கால்சியம் நிறைந்த தானியங்களை மற்றொரு நல்ல வழி. இயற்கையாக விளையும் தானியங்களான கம்பு, சோளம், தினை, கா டைக்கண்ணி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு கிண்ணம் தயிரை தினமும் உங்கள் உணவுடன் சேர்த்துக்கொள்வதால், தினசரி உங்கள் கால்சியம் தேவையில் மூன்றில் ஒரு பங்கையும், உங்கள் வைட்டமின் D தேவையில் ஐந்தில் ஒரு பகுதியையும் பெற முடியும். இது இயற்கையாகவே வைட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்களில் நிறைந்து உள்ளது. கால்சியத்தின் அன்றாட தேவையில் ஒரு பங்கைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு மூன்று கிளாஸ் பால் போதுமானது. வெறும் பால் உங்களுக்கு பிடிக்காது என்றால், மில்க்ஷேக்ஸ் அல்லது ஜூஸ் போன்றவற்றில் சேர்த்துக்கொள்ளலாம்.
Input & Image courtesy: Healthline