மூளையில் செயல்படும் இந்த வகை அறுவை சிகிச்சைகளை கையாளுவது எப்படி?
How to take care of your body after craniotomy?
By : Bharathi Latha
கிரானியோட்டமி என்பது மனித மூளையில் செய்யப்படும் ஒரு வகை மூளை அறுவை சிகிச்சை. கிரானியோட்டமி அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் மண்டை ஓட்டிலுள்ள சில எலும்புகள் அகற்றப்படுகின்றன. எலும்பின் ஒரு பகுதியான எலும்பு மடல் (bone flap), கிரானியோட்டமி அறுவை சிகிச்சையின் போது சில சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்தி நிபுணர்களால் அகற்றுப்படுகின்றது. மேலும், இது தற்காலிகமாகவே அகற்றப்படுகிறது, ஏனெனில் மூளை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எழுப்பு மடல் மாற்றப்படுகிறது. பார்கின்சன் நோய் போன்ற மூளை தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தும் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
கிரானியோட்டமி அறுவை சிகிச்சைப் பின்வரும் சில காரணங்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது. மூளைத் தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பார்கின்சன் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டியும் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது தவிர, ஒரு நபருக்கு மூளைக் கட்டிகள், மண்டை ஓட்டில் எலும்பு முறிவு, மூளை நரம்புகளில் இரத்த அடைப்பு, மூளையின் ஏதாவது ஒரு பகுதியில் காயம், போன்ற எந்தவொரு மூளை தொடர்பான சிக்கல்கள் ஏற்படும் போதும் கிரானியோட்டமி அறுவை சிகிச்சைச் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் நோயாளியை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கவனமாக கண்காணிக்கின்றனர். நோயாளியின் உடல் குணமடைய தொடங்கிய பின்னரே அவரை சாதாரண வார்டுக்கு மாற்றுகின்றனர். நோயாளி விரைவில் குணமடைய வேண்டி சில சுவாச பயிற்சிகள் அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. நோயாளிக்கு இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுப்பதிற்காக, கால் மற்றும் கணுக்கால் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நோயாளி வீட்டிற்குச் செல்லும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை மூளையில் வலி உண்டாக்கும், தலையில் காயத்தை ஏற்படக்கூடிய எந்த வேலையும் செய்ய வேண்டாம். துணி துவைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், அதிக எடையைத் தூக்குதல் போன்ற செயல்களை செய்வதைத் தவிர்க்கவும். உணவில் அதிக அளவில் திரவங்களையும், நீராகாரங்களையும் உட்கொள்ள வேண்டும்.
Input & Image courtesy:Logintohealth