"இதுவே மத்த மதங்களை பேசினால் வரிந்துகட்டிகொண்டு வந்திருப்பார்கள் ஸ்டாலினும், வை.கோவும்" - விளாசிய எச்.ராஜா #HRaja #KarupparKootam #MKStalin
"இதுவே மத்த மதங்களை பேசினால் வரிந்துகட்டிகொண்டு வந்திருப்பார்கள் ஸ்டாலினும், வை.கோவும்" - விளாசிய எச்.ராஜா #HRaja #KarupparKootam #MKStalin

முருகா நீ சூரனையே சம்ஹாரம் செய்தவன். உனக்கு பூஜை செய்ய தடை விதித்தவர்களையும் நீதான் கவனிக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கொந்தளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசியதை திரையுலக நட்சத்திரங்கள் ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர். ஆனால் இந்து விரோதிகள் ஸ்டாலின், வைகோ, ப.சி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை. அந்நிய மதக் கடவுள்களை இப்படி யாரேனும் பேசியிருந்தால் இவர்கள் சும்மா இருந்திருப்பார்களா?
கந்த சஷ்டி கவசத்தை இஷ்டம் போல் அயோக்கியன்கள் கூட்டம் அசிங்கப்படுத்தலாம். ஆனால் தி.நகரில் சத்ரு சம்ஹார பூஜைக்கு தடை. முருகா நீ சூரனையே சம்ஹாரம் செய்தவன். உனக்கு பூஜை செய்ய தடை விதித்தவர்களையும் நீதான் கவனிக்க வேண்டும். வெற்றி வேல் வீர வேல்'' எனத் தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசியதை திரையுலக நட்சத்திரங்கள் ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர். ஆனால் இந்து விரோதிகள் ஸ்டாலின், வைகோ, ப.சி, கே.எஸ.அழகிரி ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை. அந்நிய மதக் கடவுள்களை இப்படி யாரேனும் பேசியிருந்தால் இவர்கள் சும்மா இருந்திருப்பார்களா
— H Raja (@HRajaBJP) July 16, 2020