Kathir News
Begin typing your search above and press return to search.

ஹவாய் டெக்னாலஜிஸ் உட்பட 20 நிறுவனங்கள் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது - உலகிற்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்க உளவுத்துறை!

ஹவாய் டெக்னாலஜிஸ் உட்பட 20 நிறுவனங்கள் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது - உலகிற்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்க உளவுத்துறை!

ஹவாய் டெக்னாலஜிஸ் உட்பட 20 நிறுவனங்கள் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது - உலகிற்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்க உளவுத்துறை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2020 7:16 AM GMT

அமெரிக்கா உளவு நிறுவனமான பென்டகன் ஹவாய் டெக்னாலஜிஸ் மற்றும் ஹாங்க்சோ ஹிக்விஷன் டிஜிட்டல் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள் சீனாவின் இராணுவத்திற்கு சொந்தமானது அல்லது கட்டுப்படுத்துகிறது என்று கூறுகிறது. மேலும் இதே மாதிரியான 20 நிறுவனங்களின் பட்டியலிலை வைத்துள்ளது.

ஜூன் 24 தேதியிட்ட கடிதங்களில், பென்டகன் "அமெரிக்காவில் செயல்படும் கம்யூனிஸ்ட் சீன இராணுவ நிறுவனங்களின்" பட்டியலை அளிப்பதாகக் கூறியது. இந்த பட்டியல் முதலில் 1999 நிதியாண்டு பாதுகாப்பு கொள்கை சட்டத்தில் கோரப்பட்டது.

இந்த பட்டியலில் "சீனாவின் அரசாங்கம், இராணுவம் அல்லது பாதுகாப்புத் துறையுடன் சொந்தமான, கட்டுப்படுத்தப்பட்ட அல்லது இணைந்த நிறுவனங்கள் உள்ளன" என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ஹாஃப்மேன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சீன ராணுவத்துக்குச் சொந்தமான 20 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பென்டகன். அதில், இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் பட்டியல் வருமாறு,

1.Aviation Industry Corporation of China

2.China Aerospace Science and Technology Corporation

3.China Aerospace Science and Industry Corporation

4.China Electronics Technology Group Corporation

5.China South Industries Group Corporation

6.China Shipbuilding industry Corporation 7.

7.China State Shipbuilding Corporation

8.China North Industries Group Corporation

9. Huawei Technologies Co.10.

10.Hangzhou Hikvision Digital Technology Co

11.Inspur Group

12.Aero Engine Corporation of China

13.China Railway Construction Corportion

14.CRRC Corp.

15.Panda Electronics Group

16.Dawning Information Industry Co.

17.China Mobile Communications Group

18.China General Nuclear Power Corp.

19.China National Nuclear Power Corp.

20.China Telecommunications Corp.

பென்டகனின் இந்த அறிவிப்புக்கு சீன வெளியுறவுத்துறை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சீனாவின் வெளிநாட்டு நிறுவனங்கள கட்டுப்படுத்தும் அரசுக்கு சொந்தமான Assets Supervision and Administration Commission அமைப்பு ஆகியவைஇதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஆதாரம்: https://time.com/5859119/huawei-chinese-military-company-list/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News