"கங்கையின் தத்து பிள்ளையாகிய நான் 140 கோடி மக்களுக்காக உழைக்கிறேன் : இது கடவுள் உத்தரவு -பிரதமர் மோடி உருக்கம்"
வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மிகவும் உருக்கமாக தனது எண்ணங்களைப் பகிர்ந்து தான் கங்கையின் தத்துப்பிள்ளை எனக் கூறியுள்ளார்.
By : Karthiga
கங்கை நதியின் தத்து பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார். உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தலின் போது இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பிரதமர் மோடி தாக்கல் செய்தார் . முன்னதாக கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். வேதபட்டர்கள் மந்திரம் ஓத பிரதமர் மோடி கங்கையில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது :-
கங்கை நதியின் தத்து பிள்ளை நான் எனது தாய் , மனைவிக்குப் பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயைப் போல அனைவரையும் காக்கிறது என்றார் .தாயைக் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கினர் .அவரது குரல் தழுதழுத்தது. மேலும் 140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன் .இது கடவுள் உத்தரவு என்றும் கூறினார்.
SOURCE :Dinaseithi