Kathir News
Begin typing your search above and press return to search.

விருதுக்காக நான் நடிக்கல...அத வாங்கறதுக்காக துடிக்கல!! தனுஷ் நெத்தியடி பேச்சு!!

விருதுக்காக நான் நடிக்கல...அத வாங்கறதுக்காக துடிக்கல!! தனுஷ் நெத்தியடி பேச்சு!!

விருதுக்காக நான் நடிக்கல...அத வாங்கறதுக்காக துடிக்கல!! தனுஷ் நெத்தியடி பேச்சு!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Aug 2019 6:21 AM GMT



கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்'. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்த படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி,டிஜே, இன்னும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 4 ல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் தனுஷ் பேசும் போது,
வெற்றிமாறனால் வடசென்னை படத்தைவிட பெஸ்ட்டா ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்று நினைத்தேன். இப்போது ‘அசுரன்' மாதிரி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. அசுரன் படம் எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இந்த ஆண்டு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று நிறையபேர் கவலை பட்டார்கள் நாங்களும் கவலைப்பட்டோம். வட சென்னைக்கு கிடைக்கவில்லையே என்று அல்ல, நாங்கள் ஏற்கனவே வாங்கிவிட்டோம். நாங்கள் கவலைப்பட்டது மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், போன்ற படங்களுக்கு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டோம்.
நாங்கள் விருதுகளை எண்ணி படம் பண்ணுவது கிடையாது.படம் மக்களுக்கு பிடித்தால் சரி.அந்த் கவுரம் எங்களுக்கு கிடைத்து விட்டது. அதுவே எங்களுக்கு மிகப்பெரிய விருதுதான். விருது கிடைக்கவேண்டும் என்று நான் நடிச்சதும் இல்லை, கிடைக்கவில்லையே என்று துடிச்சதும் இல்லை என்றார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News