'சிவகங்கை மாவட்டத்தில் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க என்னால் முடியும்'- பாஜக வேட்பாளர் தேவநாதன்!
வறட்சியான சிவகங்கை மாவட்டத்தில் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பாஜக வேட்பாளர் தேவநாதன் தெரிவித்துள்ளார்.
By : Karthiga
சிவகங்கை தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் தேவநாதன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டம் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய வறட்சியான ஒரு மாவட்டமாகும். இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றால் கண்டிப்பாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். முதற்கட்டமாக இந்த மாவட்டத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் .மேலும் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தொகுதி வாரியாக அலுவலகங்கள் அமைப்பேன்.
இந்த தொகுதியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த மாவட்டத்திலேயே நான் தங்கி மக்களுக்கு பணி செய்ய தயாராக இருக்கிறேன் என பேசினார். அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாவது :*
சிவகங்கை தொகுதியில் பா.சிதம்பரமும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த மாவட்டத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் அவர்களின் வளர்ச்சிக்கான தொழிலை செய்து அவர்கள் முன்னேறி இருக்கிறார்கள். தவிர தொகுதி மக்கள் முன்னேறுவதற்கு எந்த நடவடிக்கையும் அவர்கள் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :Dinamani