Kathir News
Begin typing your search above and press return to search.

நூறாவது பிறந்தநாளில் என் தாய் கூறிய வார்த்தைகள் இன்னமும் எனக்கு கேட்கிறது - தயார் மறைவிற்கு பிரதமர் மோடி உருக்கம்

உடல் நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நூறாவது பிறந்தநாளில் என் தாய் கூறிய வார்த்தைகள் இன்னமும் எனக்கு கேட்கிறது - தயார் மறைவிற்கு பிரதமர் மோடி உருக்கம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 Dec 2022 3:11 AM GMT

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் நேற்று இரவு அவர் காலமானார் அவருக்கு வயது 100.

நேற்று முன்தினம் மாலை மருத்துவமனைக்கு சென்று தயாரின் உடல்நிலை குறித்து பிரதமர் விசாரித்தார், அதனை தொடர்ந்து நேற்று அளிக்கப்பட்ட சிகிச்சையில் பிரதமர் மோடியின் தாயார் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் வயது மூப்பின் காரணமாக அவர் நேற்று நள்ளிரவு காலமானார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், 'ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்து விட்டது. என் தாயிடம் ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகி அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் உணர்ந்துள்ளேன். நூறாவது பிறந்தநாளில் நான் அவரை சந்தித்த பொழுது ஒரு விஷயத்தை சொன்னார், 'புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள் தூய்மையுடன் வாழ்க' என எனக்கு இப்போதும் அது என் நினைவில் இருக்கிறது' என உருக்கமாக தெரிவித்துள்ளார் பிரதமர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News