‘‘என் தாயை இழந்து விட்டேன்’’ - சுஷ்மா மறைவு குறித்து பாகிஸ்தான் சிறையில் இருந்து மீட்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் உருக்கம்!! #SushmaSwaraj
‘‘என் தாயை இழந்து விட்டேன்’’ - சுஷ்மா மறைவு குறித்து பாகிஸ்தான் சிறையில் இருந்து மீட்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் உருக்கம்!! #SushmaSwaraj
By : Kathir Webdesk
மும்பையை சேர்ந்தவர் ஹமீது நேஹல் அன்சாரி. பொறியாளரான இவர் பேஸ்புக்கில் இவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தோழியாக அறிமுகமானார். அங்குள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கரக் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணும் அன்சாரியும் தினமும் சாட் செய்து பிறகு நட்பு காதலாக மாறியது.
இந்நிலையில் திடீரென அந்த பெண், அன்சாரியுடனான நட்பை துண்டித்தார் இதனால் சோகமான அன்சாரி தனது தோழியை சந்திக்க ஆப்கானிஸ்தான் வழியாக 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். கரக் நகரில் அவரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். ஆவணங்கள் இல்லாமல் உளவு பார்க்க சென்றதாகக்கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2015-ஆம் ஆண்டு அவருக்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையை வழங்கியது.
அவரை விடுவித்து இந்தியா அழைத்து வர அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெரும் முயற்சி மேற்கொண்டார். பெஷாவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று அன்சாரி இந்தியா அழைத்து வரப்பட்டார்.
இந்தியா மீட்டுவரப்பட்ட அவர், முதலில் சந்தித்தது சுஷ்மாவைத்தான். அவரது சந்திப்பு உருக்கமானதாக இருந்தது.
இதில் சுஷ்மா ஸ்வராஜின் பக்கு மிகப்பெரியதாக இருந்தது. ஆதேபோல் இந்த முயற்சிக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் சுஷ்மாவை பாராட்டியது.
இந்தநிலையில் சுஷ்மா ஸ்வராஜ் மறைந்த செய்தி கேட்டு அன்சாரி பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;-
‘சுஷ்மா ஸ்வராஜ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரது இழப்பை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் நாடு திரும்ப அவர் செய்த உதவிகள், அவரின் முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அவர் எனக்கு தாய் போன்றவர். நான் பாகிஸ்தானில் இருந்து திரும்பியபோது எனக்கு நல்லமுறையில் வழிகாட்டினார். என் வாழ்கையில் இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எனக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அவரது மரணம் எனக்கு பேரிழப்பு. எனது தாயை இழந்தது போன்றது.
இவ்வாறு அன்சாரி கூறினார்
இதேபோல பாகிஸ்தானில் இருந்து மீட்டு வரப்பட்ட கீதா என்ற வாய்பேச முடியாத இந்தூரை சேர்ந்த பெண்ணும் தனது செய்கை மொழியில் தனது சொல்ல முடியாத துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
.