Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்.. இதுதான் என் லட்சியம் - ஸ்டீவ் ஸ்மித்...

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்.. இதுதான் என் லட்சியம் - ஸ்டீவ் ஸ்மித்...

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்.. இதுதான் என் லட்சியம் - ஸ்டீவ் ஸ்மித்...

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 1:08 PM GMT

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய அணி டெஸ்டில் சிறப்பாக விளையாடினாலும் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது இல்லை.

ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு 2004 ஆம் ஆண்டு சுற்றுபயணம் மேற்கொண்டு அதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பிறகு இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்தபோது 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

இதைப்பற்றி ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில்: டெஸ்ட் தொடரை இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்பதை விரும்புகிறேன். ஆஸ்திரேலியா வீரர்கள் கிரிக்கெட்டை பற்றி பேசும்பொழுது ஆஷஸ் தொடர் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் மிகப் பெரியது என்றனர்.

ஆனால் இந்திய அணி தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இதனால் இந்தியாவை வெல்வது அவ்வளவு சுலபமில்லை. எனவே இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது விரும்புகிறேன் என்றார் ஸ்டீவ் ஸ்மித்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News