Kathir News
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.!

பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.!

பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கினார்  ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Nov 2019 12:29 PM IST



தாதா - நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின் துறை செயலராக ஐ ஏஎஸ் அந்தஸ்தில் பணியாற்றியவர் கண்ணன் கோபிநாதன். இவர் கேரள மாநிலம் புத்தம்பள்ளியை சேர்ந்தவர். இவருக்கு எப்படியாவது பொதுமக்கள் மத்தியில் மிக பிரபலமான முக்கியஸ்தராக வருவதில் அலாதி பிரியம். குறிப்பாக மிகப்பெரிய அரசியல் தலைவராக குறுகிய காலத்தில் வர வேண்டும் என்ற ஆசை உடையவர்.


ஐஏஸ் அதிகாரி ஆன பிறகும் அந்தப் பணிகளில் நாட்டம் கொள்ளாமல் தான் பிரபல தலைவராகும்எண்ணங்களுடன், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதை மறைத்து கேரள வெள்ளத்தின் போது மக்களிடையே ஹீரோ போல மீட்பு பணிகளில் செயல்பட்டார் என செய்திகள் வந்தன.


இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் வகையில் அரசியல் சட்டம் 370 - ஐ ரத்து செய்தது.


நாடே பரபரப்பாக இருந்த இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் தன்னை பற்றி பேச வேண்டும் என நினைத்த அவர் அரசியல் சட்டம் 370 - ஐ ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து தனது பணியை ராஜினாமா செய்யப் போவதாக பத்திரிக்கைகளைக் கூட்டி அறிவித்தார். என்றாலும் அவர் அனுப்பிய ராஜினமா கடிதத்தை இது வரை அரசு ஏற்கவில்லை. அவர் திரும்பி வந்து பதவியை ஏற்க மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.


ஆனால் அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தபின் அரசுக்கு எதிரான ஊடகங்களும், பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவான பத்திரிக்கைகளும் அவரை சில நாட்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடின.


குறிப்பாக தடை செய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ)வின் துணை அமைப்புகள் மற்றும் இதன் சகோதர நிறுவனங்கள் இவருக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த இயக்கங்கள் மிகுந்த பயங்கரவாத இயக்கங்களாக அறியப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் கும்பகோணம் ராமலிங்கம், பெங்களூர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ருத்ரேஷ் உட்பட கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இது வரை 24 அரசியல் கொலைகளில் பி.எஃப்.ஐ மட்டும் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது.


கேரளா மற்றும் தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான மிக கொடூரமான கொலைகளில் ஈடுபட்டுவரும் இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு தீவிர இஸ்லாமியக் குழு தலை நகர் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. தீவிர இஸ்லாமிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “கண்ணியத்தின் தசாப்தம்” என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.


இந்த நிகழ்ச்சியில் கண்ணன் கோபிநாதன் கலந்து கொண்டார், இந்த நிகழ்ச்சியை நடத்திய இந்த அமைப்பின் பெற்றோர் அமைப்பு சர்ச்சைக்குரிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) ஆகும். புது தில்லியில் உள்ள டகோத்தரா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பான விபரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


Translated Article From OP INDIA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News