காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் அதிகரித்த வாக்குப்பதிவு- அமித்ஷா!
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதாகவும் சிறப்பு அந்தஸ்தை எதிர்த்தவர்களுக்கு இந்த உரிய பதிலடியாக உள்ளதாகவும் அமிர்தா தெரிவித்துள்ளார்.
By : Karthiga
சிறப்பு அந்ஸ்து ரத்து செய்யப்பட்டதால் தான் ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார் .ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் 38 சதவீதம் வாக்குகள் பதிவாகின.தேசிய அளவில் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான வாக்குப் பதிவு என்றாலும் காஷ்மீரில் முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இது அதிகமாகும். 1996க்கு பிறகு இது அதிகபட்ச வாக்கு பதிவாகும் .
ஏனெனில் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் 2019 தேர்தலில் 14.43 சதவீதம் 2014-இல் 25.86 சதவீதம் 2009 ல் 25.55 சதவீதம் 2004 ல் 18.57 சதவீதம் அளவுக்கே வாக்குகள் பதிவாகின.இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அமித்ஷா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் "ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முடிவு வாக்குப்பதிவில் எதிரொலித்துள்ளது.
காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. இது ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதையும் காட்டுகிறது. தேர்தலில் உற்சாகமாக வாக்களித்ததன் மூலம் சிறப்பு அந்தஸ்து தரத்தை எதிர்த்தவர்களுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
SOURCE :Dinamani