மன உறுதியுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்: உண்ணாவிரதத்தில் சாதனை படைத்த சிறுமி!
மன உறுதியுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்றுஉண்ணாவிரதத்தில் சாதனை 16 வயது இந்திய சிறுமிop
By : Karthiga
மும்பை கண்டிவாலா பகுதியைச் சேர்ந்த ஜிகர்ஷா, ரூபா ஷா தம்பதியினரின் மூத்த மகள் கிரிஷா. இவர் 110 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார் கிரிஷா இளம் வயதிலேயே மன உறுதியுடன் இருப்பதில் வல்லமை படைத்தவராம். இவர் 9 வயதாக இருக்கும் போது எட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தும் 16 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தும் 14 வயதில் 16 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தும் சாதனை படைத்துள்ளார் என்றனர் .
கிரிஷா முதலில் 16 நாட்கள் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 16 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து முடிவடைந்த நிலையில் அவரது உடலில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது தெரிந்த பிறகு அவரது ஆன்மீக குருவின் ஆலோசனைப்படி 3, 51, 71 என்று நாட்களை தொடர்ந்துள்ளார். அவரது உண்ணாவிரத காலத்தில் காலை 9 மணி முதல் 6.30 மணி வரையிலும் காய்ச்சிய நீரை மட்டுமே பருகுவார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் குறித்து கிரிஷா குறிப்பிடுகையில் இந்த உண்ணாவிரதத்தால் எனக்கு 18 கிலோ உடல் எடை குறைந்துள்ளத. மன உறுதியோடு இருந்து ஒரே குறிக்கோளாய் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று கூறியுள்ளார். அவர் தனது உண்ணாவிரதத்தை தொடங்கிய காலத்தில் மன உறுதி பெறவும் ஒருமுக தன்மையோடு செயல்படவும் கொண்ட குறிக்கோளிலிருந்து பின்வாங்காமல் இருக்கவும் மத நூல்களைப் படித்துள்ளார். இதன் மூலமே இவரால் இந்த சாதனையை சேய்ய முடிந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.