"அழகான ஆண்கள் இருக்க விளம்பரங்களில் பெண்கள் எதற்கு?" - இம்ரான்கான் உதவியாளரின் குபீர் பேட்டி !
"பாகிஸ்தானில் பல அழகான ஆண்கள் இருந்தாலும், விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்புகளை பிரபலப்படுத்த பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்" என்று கூறினார்.
By : Saffron Mom
'மத நல்லிணக்கத்திற்கான' பாகிஸ்தான் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதி மௌலானா தாஹிர் மெஹ்மூத் அஷ்ரபி பெண்கள் இடம்பெறும் விளம்பரங்களை ஞாயிற்றுக்கிழமையன்று விமர்சித்தார், "பாகிஸ்தானில் பல அழகான ஆண்கள் இருந்தாலும், விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்புகளை பிரபலப்படுத்த பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்" என்று கூறினார்.
பாகிஸ்தான் உலமா சபையின் (PUC) தலைவரும், முத்தலாக் உலமா வாரியத்தின் தலைவருமான மௌலானா தாஹிர் அஷ்ரபி, "விளம்பரங்களில் தேவையில்லாமல் பெண்களை இடம்பெறச் செய்யக் கூடாது. அத்தகைய நடைமுறைகளை தான் ஆதரிக்கவில்லை" என்று ஜியோ செய்திகளின்படி, லாகூரில் உள்ள ஊடகங்களிடம் கூறினார்.
மேலும், பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"நாட்டிலிருந்து ஆபாசம், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் உலமாக்களின் பங்கு உள்ளது," என்று அஷ்ரஃபி கூறினார்.
மேலும், இம்ரான் கானின் உத்தரவுப்படி, உலகம் முழுவதும் இஸ்லாமோஃபோபியா (Islamophobia) அதிகரித்து வருவதை எதிர்த்து பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக அஷ்ரபி கூறினார்.
இந்த இலக்கை அடைய, அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களை தொடர்பு கொண்டுள்ளது என்றார் அஷ்ரஃபி. இணையத்தளங்களில் 'இறைநிந்தனை' (Blasphemy) வெளியிடுபவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டான் செய்திகளின் படி, படி, முஹர்ரம் மாதத்தில் மதவாத பதட்டங்களைத் தீர்க்க அழைப்பு விடுத்த முதல் மத அறிஞர்களில் மௌலானா அஷ்ரபியும் ஒருவர். இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்டுவதற்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.
அவரது முந்தைய பதவிகளில் 2012 முதல் 2015 வரை இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலின் உறுப்பினராக பணியாற்றினார். 2000 முதல் 2007 வரை மத மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பாக பஞ்சாப் அரசாங்கத்தின் உள்துறைத் துறையின் ஆலோசகராகவும் இருந்தார்.