“பாகிஸ்தானின் மு.க.ஸ்டாலின்” - யார் அந்த உளறு வாயன்? என்ன உளறினார்?
“பாகிஸ்தானின் மு.க.ஸ்டாலின்” - யார் அந்த உளறு வாயன்? என்ன உளறினார்?
By : Kathir Webdesk
நம்ம ஊர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டை கையில் வைத்து வாசித்தாலும் உளறி கொட்டுவதில் உச்சம் தொட்டவர்.
“யானைவரும் முன்னே...”, “பூனைமேல் மதில்...” என்று தமிழ்ப் பழமொழிகளை எல்லாம் கடித்து குதறினார்.
தனது ஆங்கிலப்புலமை உலகறியச் செய்வதற்காக, “A VACCUM IS FILED AS IT IS SRIED" உன்று உளறி கொட்டி, நெட்டிசன்களிடம் வாங்கி கட்டினார்.
அவர் தனது கணித அறிவை, “86+9 = 97” என்று உளறுவாயால் திருவாய் மலர்ந்து, சந்தி சிரிக்க வைத்தார்.
“சுதந்திர தினம் டிசம்பர் - 25” என்று பொதுமேடையில் பேசி அசிங்கப்பட்டார்.
“நான் ஜப்பான் துணை முதலமைச்சராக இருந்தபோது” என்று உளறி தனது பொது அறிவை உலகறியச் செய்தார்.
அதோபோல ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான “மணிமேகலை” காப்பியத்தை எழுதிய புலவர் சீத்தலை சாத்தனாரை “கீர்த்தனார்” என்று துண்டு சீட்டைப் பார்த்தும் தவறாக வாசித்து உளறினார்.
இப்போது பாகிஸ்தானிலும் ஒரு மு.க.ஸ்டாலின் உதயமாகி இருக்கிறார். அவர்தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.
இவரது உளறல்தான் இன்று உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அவர், ஐ.நா சபையில் பிரதமர் நரேந்திர மோடி பற்றி குறிப்பிடும் போது “இந்திய அதிபர் நநேர்திர மோடி” என்று உளறி கொட்டி விட்டார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரானில் பேசியபோது, பிரான்ஸ் - ஜெர்மனி எல்லைப் பகுதி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஜப்பானும், ஜெர்மனியும் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்றார். இது அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இப்போது இம்ரான்கான், நெட்டிசன்களிடம் சிக்கி மீண்டும் சின்னாபின்னமாகி வருகிறார்.