கத்தோலிக்க போப் பிராசிஸ்சின் சொந்த நாட்டில், வாய் பேச முடியாத சிறுமிகளை கற்பழித்த பாதிரியார்கள்! 45 ஆண்டு ஜெயில் தண்டனை!
கத்தோலிக்க போப் பிராசிஸ்சின் சொந்த நாட்டில், வாய் பேச முடியாத சிறுமிகளை கற்பழித்த பாதிரியார்கள்! 45 ஆண்டு ஜெயில் தண்டனை!
By : Kathir Webdesk
அர்ஜெண்டினாவில் உள்ள மெண்டோஸ் நகரில் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் உள்ளது. இதனை கிறிஸ்தவ பாதிரியார்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கி படித்து வருகின்றனர்.
2014-ஆம் ஆண்டு இந்த காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுமிகள் அங்குள்ள பாதிரியார்களால் கற்பழிக்கப் பட்டனர்.
ஆனால், வழக்கம்போல இதனை மூடி மறைக்கும் வேலையில் காப்பக நிர்வாகிகளான பாதிரியார்கள் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மக்கள் கொதித்தெழவே, வேறுவழியில்லாமல் இந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போனது.
3 ஆண்டுகள் கோர்ட்டில் இது தொடர்பான விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் பாதிரியார்கள் குரோஷியோ கார்பெச்சோ (வயது 59) நிக்கோலா கொர்ராடி(83) ஆகிய இருவரும் கற்பழிப்பு குற்றவாளிகள் என்று நிரூபணமானது. இதனைத்தொடர்ந்து பாதிரியார் கார்பச்சோவுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கொர்ராடிக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவரின் தந்தை கூறும்போது, “வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுபோன்ற கேவலமான விஷயங்கள் இந்த உலகத்திற்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றன. இதுபோன்ற குற்றங்களை செய்த குற்றவாளிகள், பாதிரியார்கள் எந்த முகமூடிகளை அணிந்து உள்ளதால், அவர்களை காப்பாற்றுவதில்தான் கத்தோலிக்க நிர்வாகம் முனைகின்றது. இது மிகப்பெரிய தவறு” என்றார்.
பாதிரியார் கொர்ராடி, இத்தாலியை சேர்ந்தவர். இவர் 1970-இல் அர்ஜெண்டினாவில் உள்ள வெர்ரோனா நகரில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர். ஆனால் அப்போது இவர் தனது பாதிரியார் அந்தஸ்தை பயன்படுத்தி தப்பிவிட்டார்.
தற்போது கத்தோலிக்க போப்பாக இருக்கும் பிரான்சிஸ் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர். அவரின் சொந்த நாட்டில், வாய் பேச முடியாத - காது கேட்காத சிறுமிகள், அவர் சார்ந்துள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் கற்பழிக்கப்பட்டு உள்ளது வாடிகனுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.