குடும்ப பிரச்சினைக்கா சென்னை விமான நிலையத்தில் குண்டு என தகவல் கொடுத்தது யார்?
சென்னை விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டதாக சொந்த சகோதரியின் குடும்பத்தை சிக்க வைத்த தம்பி.
By : Bharathi Latha
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு துபாய் சென்றும் இண்டிகோ விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் தான் குண்டு வைப்பதாக ஒரு செய்தி எழ, குறிப்பாக இந்த விமானத்தில் 174 பயணிகள் பயணம் செய்ய காத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் காலை 6:30 மணி அளவில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் கால் ஒன்று வந்தது. அதில் பேசிய மற்றொரு நபர் காலை செல்ல உள்ள இண்டிகோ விமானத்தில் குண்டு வைக்கப்பட்டதாக, அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்பது போன்று கூறி இருக்கிறார்.
மேலும் அந்த விமானத்தில் பயணம் பெண்ணின் பெயர் மற்றும் அவருடைய கணவர், குழந்தை பெயரை குறிப்பிட்ட அவர்கள் பையில்தான் அந்த வெடிகுண்டு இருக்கிறது என்று தகவலை கொடுத்து போனை கட் செய்துள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். உடனடியாக விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சென்னை விமான அதிகாரிகள் உஷாராகி விமான நிலையம் முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. குண்டு வைக்கப்பட்டதாக எச்சரிக்கப்பட்ட இன்டிகோ விமானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வெடிகுண்டு பரிசோதனை ஈடுபட்டனர்.
விமான பகுதி இன் மற்ற பகுதிகளிலும் தீவிரவாதி சோதனை செய்யப்பட்டது. பயணிகள் கொண்டு சென்ற உடமைகளிலும் தேடப் பட்டது. பிறகு மிரட்டல் விடுத்த அந்த நபர் யார்? என்று அடையாளம் காண, அவர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அவரின் சகோதரிக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறு ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக ஏழு 45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் காலை 11 மணிக்கு தாமதமாக செல்லப்பட்டது.
Input & Image courtesy: Maalaimalar