புத்தாண்டு தினத்தன்று தேவி கோவிலில் 12 பேர் உயிரிழப்பு: யார் காரணம்?
புத்தாண்டு தினத்தன்று வைஷ்ணவி தேவி கோவில் கூட்ட நெரிசல் காரணமாக 12 பேர் உயிரிழப்பு.
By : Bharathi Latha
இந்த வருட புத்தாண்டு தினத்தன்று ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் கூட்ட நெரிசல் காரணமாக 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உள்ளாகியுள்ளது. மேலும் இது தொடர்பான செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன ஆனால் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களை அடைந்துள்ளனர். மேலும் உயிர் தப்பிய மக்கள் இதுபற்றி கூறுகையில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் கூறுகையில், "சில சிறுவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சில நொடிகளில் நெரிசல் ஏற்பட்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்து முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பக்தர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் கோவிலில் குறைந்ததாகவும் மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான யாத்ரீகர்களைப் பார்க்கும் பிரபலமான இந்து புனிதத் தலமாகும் இந்தக் கோவில், மலை உச்சியில் இருக்கும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் உள்ள கத்ரா அடிவார முகாமில் இருந்து மலையேறுவது வழக்கம்.
பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சன்னதி அதிகாரிகளின் தவறான நிர்வாகமே நெரிசலுக்கு வழிவகுத்தது என்று தப்பிப்பிழைத்தவர்கள் பின்னர் குற்றம் சாட்டினர். ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இதுபற்றி கூறுகையில், "கத்ரா கூட்ட நெரிசலில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பதினாறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒன்பது பேர் வெளியேற்றப்பட்டனர். ஏழு பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களில் சிலர் வென்டிலேட்டர்களில் உள்ளனர்" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News