காளஹஸ்தி சிவன் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி!
திருப்பதியில் அமைந்துள்ள காளகஸ்தி சிவன் கோவில் இந்தியாவின் தேசியக்கொடி கம்பீரமாக நிற்கும் காட்சி.
By : Bharathi Latha
ஆன்மீக தலங்களில் மிகவும் புகழ்பெற்ற தலமாக திருப்பதி செய்கின்ற ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவில் அமைந்து இருக்கிறது. குறிப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலங்களில் ஒன்றாக ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயில் அமைந்துள்ளது. மத்திய அரசு தொடங்கிய 75வது சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை தற்போது நாடு முழுவதும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
ஆசாதிக் கா அம்ருத் மகோத்சவ் விழா என்பது முகல் மூவர்ண கொடியை தங்களுடைய வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் கடைகளிலும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15ம் தேதி வரை பறக்க விடுவதற்காக அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது மேலும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு பிரச்சாரங்களையும் அரசியல் கட்சி தலைவர்கள் செய்துகண்டு வருகிறார்கள் அந்த வகையில் தற்போது ஆன்மிக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் காளகஸ்தி கோவிலில் தேசியக்கொடி வைக்கப்பட்டுள்ளது.
Image Source: Dinamalar
மேலும் சிவன் கோவிலின் நுழைவாயிலில் சுமார் 60 அடி உயரத்தில் தேசியக் கொடி கட்டப்பட்ட செயல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கோவிலின் தல வரலாற்றில் முதல்முறையாக கோபுரம் மீது தேசியக் கொடியை ஏற்று செய்தல் இதுதான் முதல் முறையாகும் கருதப்படுகிறது. மூவர்ண கொடியின் மீது மின்விளக்குகள் அலங்கரித்து இருப்பதும் மின்னி, மின்னி ஜொலிப்பது அனைவரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது.
Input & Image courtesy: Dinamalar news