Kathir News
Begin typing your search above and press return to search.

அபுதாபியில் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட பிரம்மாண்டமான இந்து கோவில்- 'மதநல்லிணக்க திருவிழா' என்ற பெயரில் 14 ஆம் தேதி திறப்பு விழா!

ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதும் மொழி, இன, மத பேதங்களை கடந்த ஒரு நாடாக விளங்கி வருகிறது.

அபுதாபியில்  மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட பிரம்மாண்டமான இந்து கோவில்- மதநல்லிணக்க திருவிழா என்ற பெயரில் 14 ஆம் தேதி  திறப்பு விழா!
X

KarthigaBy : Karthiga

  |  3 Feb 2024 11:45 AM IST

அபுதாபியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருப்பது போல் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாடும் வெளிநாட்டவர்களில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதும் மத நல்லிணக்கத்துடன் அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் வழிபாட்டு முறைகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக எல்லா மதத்தவர்களுக்கும் அவரவர் விருப்பப்படி வழிபடுவதற்கு இந்த கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் யூத ஆலயம் மற்றும் குருத்வாரா சீக்கிய கோவிலும் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


துபாயில் உள்ள பர்துபாய்,ஜெபல் அலி பகுதிகளில் இந்து கோவில்கள் மற்றும் குரு துவாரா உள்ளது. இந்த கோவில்களில் இந்தியாவில் வழிபடுவது போல் அனைத்து வழிபாட்டு சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. தற்போது அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் காண இருக்கும் இந்து கோவில் அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் அதன் நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளுக்கிணங்க அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது .அதை தொடர்ந்து துபாய் அபுதாபி ஷேக் ஜாகிர் சாலையில் உள்ள அல்-ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடியில் அபுதாபி அரசு சார்பில் இந்து கோவில் கட்ட ஒதுக்கப்பட்டது .


இதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பு வகித்த தற்போதைய அமீரக அதிபர் மேதகு ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார். இந்த அபுதாபி இந்து கோவில் கட்டுமான பணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பாப்ஸ் என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியா உட்பட இங்கிலாந்து, அமெரிகக்கா, ஆஸ்திரேலியா, கன்னடா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் மொத்தம் 1200 கோவில்களை கட்டி நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது .


இதைத் தொடர்ந்து அபுதாபிக்கு கடந்த 2017- ஆம் ஆண்டு வருகை புரிந்த பிரதமர் மோடி பாப்ஸ் அமைப்பின் சமைப்பு நிர்வாகிகளை சந்தித்து கோவில் கட்டுமான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இதை அடுத்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி அபுதாபியில் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் துபாய், ஒபேரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கோவில் மாதிரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் .


இந்திய பாரம்பரிய முறைப்படி கோவில் கட்ட திட்டமிடபட்டு இருந்ததால் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த 3000 சிற்ப கலைஞர்கள் அபுதாபிக்கு வரவழைக்கப்பட்டு மும்ரமாக நடந்து வந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த கோவில் தரைதளத்துடன் சேர்த்து 14-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது .விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவிலை திறந்து வைத்து கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார்.


அன்றைய தினம் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 18-ஆம் தேதி முதல் கோவில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அபுதாபி இந்து கோவில் இரு நாடுகளின் கலாச்சாரங்களை மட்டுமல்ல மத நல்லிணக்கத்துக்கும் சான்றாக அமைக்கப்பட்டது .உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News