Kathir News
Begin typing your search above and press return to search.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு.! #IncomeTaxReturn #ITDateExtension

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு.! #IncomeTaxReturn #ITDateExtension

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு.! #IncomeTaxReturn #ITDateExtension
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 10:30 AM GMT

2019-20 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

"நாம் தற்போது இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, புரிதலுடன் கால அவகாசத்தை நாங்கள் மேலும் நீட்டித்திருக்கிறோம். 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இது உங்கள் திட்டயிடலுக்கு உதவியாக இருக்கும் என்று ‌நம்புகிறோம்" என்று வருமான வரித்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

கடந்த மாதம் PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசமும் இதே போல் மார்ச் 31,2021 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறிய அளவிலான மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு தற்காலிகமாக நிவாரணம் அளிக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் வரை சுயமதிப்பீட்டு வரி செலுத்த வேண்டியவர்களுக்கு வருமான வரித் தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சுய மதிப்பீட்டு வரி என்பது வருமான ஆதாரத்தில் கழிக்கப்பட்டது போக செலுத்த வேண்டிய தொகை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அளவில் சுய மதிப்பீட்டு வரி செலுத்த வேண்டியவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்பதோடு தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News