செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி உயர்வு- மத்திய அரசு அறிவிப்பு!
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டியை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
By : Karthiga
மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது மோடி அரசு. மோடி அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த மக்கள் அனைவரும் 'மீண்டும் வேண்டும் மோடி அரசு ' என்று கேட்கும் அளவிற்கு மோடியின் அரசு 9 ஆண்டு கால சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.இந்நிலையில், வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளில் அளிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களில் இயக்கப்படும் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது.அது போல் வருகிற ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று அறிவித்தது. அதன்படி பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டவட்டி 8 சதவீதத்தில் இருந்து 8.2% உயர்த்தப்படுகிறது .
மூன்று ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி 7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இருப்பினும் பொது சேமநல நிதி ,கிசான் விகாஸ் பத்திரம் தேசிய சேமிப்பு திட்டம் , மாதாந்திர வருவாய் திட்டம் உள்ளிட்ட இதர சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
SOURCE :DAILY THANTHI