Kathir News
Begin typing your search above and press return to search.

கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு - மத்திய மந்திரி சபை முடிவு!

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவின்டாலுக்கு 300 வரை உயர்த்த மதிய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு - மத்திய மந்திரி சபை முடிவு!

KarthigaBy : Karthiga

  |  28 Dec 2023 4:00 AM GMT

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபையின் பொருளாதார விவகார குழு கூட்டம் நடந்தது . அதில் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது :-


கொப்பரை தேங்காய் விலை உலகம் முழுவதும் சரிந்து விட்டது. இருப்பினும் உற்பத்தி செலவு விட 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை அளிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது .அதன்படி உலர் பழமாகவும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பால் கொப்பரை தேங்காய் விலை குவின்டாலுக்கு ரூபாய் 250 உயர்த்தப்பட்டு ரூபாய் 12000 ஆக நிர்ணயிக்கப்படுகிறது எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படும் அரவை கொப்பரை தேங்காய் விலை குவின்டாலுக்கு ரூபாய் 300 உயர்த்தப்பட்டு பதினோராயிரத்து 160 ஆக நிர்ணயிக்கப்படுகிறது .


எனவே அரவை தேங்காய்க்கு 51.84 சதவீத லாபம் பால் கொப்பரை தேங்காய்க்கு 63.26 சதவீத லாபமும் கிடைக்கும். இது அகில இந்திய சராசரி உற்பத்தி செலவு விட ஒன்றரை மடங்குக்கு மேல் அதிகம். இது தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு தூண்டுகோலாக அமையும். நடப்பு பருவத்தில் 1.33 லட்சம் டன் கொப்பரை தேங்காய்களை ரூபாய் 1493 கோடிக்கு மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது .இதனால் 90 ஆயிரம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார் .


மேலும் பீகார் மாநிலத்தில் திகா சோனிபுர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது 4.56 கிலோ மீட்டர் நீள ஆறு வழி மேம்பாலம் கட்ட மதிய மந்திரி சபையின் பொருளாதார விவகார குழு ஒப்புதல் அளித்தது. 3064 கோடி செலவில் இப்பாலம் கட்டப்படும். 42 மாதங்களில் கட்டுமான பணி நிறைவடையும் .இந்த பாலம் போக்குவரத்தை விரைவு படுத்தவும் எளிமைப்படுத்தவும் உதவும்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News