தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- அண்ணாமலை!
சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும் சாதனை படைக்கும் வாய்ப்பை நீட் தேர்வு வழங்குவதால் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
By : Karthiga
தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பா.ஜ.க மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
"நீர் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும் மருத்துவக் கல்வியில் சாதனை படைக்கும் வாய்ப்பை நீட் தேர்வு வழங்குவதால் தமிழக மாணவர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது .
தமிழக மருத்துவ கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆண்டுகளில் மாவட்டத்திற்கு தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி எனும் இலக்கை நிச்சயம் நிறைவேற்றுவார். இதன் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்கள் என்பது உறுதி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
SOURCE :Dinamani