இந்தியாவில் உள்நாட்டில் அதிகரித்த இயற்கை எரிவாயு உற்பத்தி- தினமும் 1.5 கோடி கன மீட்டர்!
இந்தியாவில் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி உள்நாட்டிலேயே அதிகரித்துள்ளதால் இறக்குமதி குறைந்துள்ளது.
By : Karthiga
உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி கணிசமாக குறைந்து வருகிறது என சந்தை ஆய்வு நிறுவனமான கேர் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கடந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் திரவ எரிவாயுவில் 53 சதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விகிதம் தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வரும் 2025 -26 ஆம் நிதி ஆண்டில் இயற்கை எரிவாயு பயன்பாட்டில் 45 சதவீதம் மட்டுமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் இயற்கை எரிவாயுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதேநேரம் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கப்படுகிறது .தினமும் கூடுதலாக மூன்று கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு தயாரிப்பதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. அடுத்த நிதியாண்டில் மட்டும் தினமும் கூடுதலாக 1.5 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்பட உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE :kaalaimani.com