விண்வெளித் துறையில் சாதிக்க விரும்பும் நாடுகளுக்கு இந்தியா ஒரு கலங்கரை விளக்கம் - உலக வர்த்தக அமைப்பு தகவல்!
விண்வெளித் துறையில் இந்தியாவின் சாதனையும் உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட தகவலும்.
By : Karthiga
விண்வெளித் துறையில் சாதிக்க விரும்பும் நாடுகளுக்கு இந்தியா கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என்று உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டபிள்யு.டி.ஓ அமைப்பின் நான்காவது தொழில் புரட்சி செயற்குழு உறுப்பினர் செபாஸ்டியன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது :-
விண்வெளித் துறையில் சாதிக்க விரும்பும் சிறிய நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் கலங்கரை விளக்கமாகவும் இந்தியா விளங்குகிறது.அந்த நாடுகள் விண்வெளித் துறையில் சாதிக்க இந்தியாவின் அமைப்பு உதவ விரும்புகிறது. அனைத்து தரப்பினரை உள்ளடக்கிய வகையிலும் பொறுப்பான முறையிலும் விண்வெளிதத் துறை வளர வேண்டும் என்று கருதி இந்த உதவியை உலக பொருளாதார அமைப்பு செய்ய விரும்புகிறது.
விண்வெளித் துறைக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதில் தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. பொது விண்வெளி உள்கட்டமைப்பை உருவாக்க இந்தியாவால் முடிந்தால் அது விண்வெளி சார்ந்த தொழிலின் துரித வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும். இன்றளவும் விண்வெளி துறையில் இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக விண்வெளி நாடுகளில் உள்ள சிலர் கருதுகின்றனர் .ஆனால் விண்வெளித் துறையில் முன்னணியில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என்பதே உண்மை.
விரைவில் விண்வெளித் துறை டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட தொழில் துறையாக மாறும் என்றார். 2033 ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி பொருளாதாரத்தின் மதிப்பு 44 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது .இது சர்வதேச விண்வெளி பொருளாதார மதிப்பில் 8% ஆகும்.
SOURCE:Kaalaimani.com