வாக்கு வங்கிக்காக சமூகத்தை பிளவுபடுத்தும் இந்தியா கூட்டணி- பிரதமர் மோடி!
வாக்கு வங்கிக்காக சமூகத்தை பிளவுபடுத்துவதே இந்தியா கூட்டணி கட்சிகளின் இலக்கு என பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
நாடாளுமன்ற 6 மற்றும் 7 -ஆம் கட்ட தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் உத்திரபிரதேசத்தின் பஸ்தி நகரில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
நாட்டில் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இந்த ஐந்து கட்டங்களும் நாட்டில் மூன்றாவது முறையாக மோடி அரசாங்கத்தை உறுதிப்படுத்தி உள்ளன. இதற்கு நீங்கள் சுற்றி பார்க்க தேவையில்லை .இந்தியா கூட்டணி தலைவர்களின் அறிக்கையை மட்டும் பாருங்கள் .ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான புள்ளிவிவரங்களை சொல்கிறார்கள். அவர்களின் பழைய பதிவுகளையும் முடிவுகளையும் நீங்கள் தேடினால் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் இரண்டு நாட்களுக்கு முன்பும் இன்றும் அவர்களின் அறிக்கைகள் பற்றி அறியாத அளவுக்கு மன அழுத்தத்தில் ஆழ்ந்துள்ளது .உங்களுக்கு தெரியும் இதுதான் அவர்களின் நிலைமை.
நீங்கள் அனைவரும் தங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காத அறிவாளிகள் .சமாஜ்வாடி மற்றும் காங்கிரசுக்கு ஆதரவாக போடும் ஒரு வாக்குக்கும் மதிப்பில்லை. ஜனவரி 22 அன்று நான் சொன்னால் நாடு தானாகவே 'ஜெய்ஸ்ரீராம்' என்று பதில் அளிக்கிறது .கடந்த 500 ஆண்டுகளாக ராமர் கோவிலுக்காக நம் நாடு காத்திருக்கிறது .ஆனால் இந்திய கூட்டணிக்கும் அதன் தலைவர்களுக்கும் ராமர் கோவிலில் பிரச்சனைகள் உள்ளன. ராமர் கோவிலினால் பயனில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் தனது பாதுகாவலர்களை குறைத்துள்ள நிலையில் அதன் அனுதாபிகளான சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர் .அவர்கள் சொல்வதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருப்பதால் பயப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள் .இன்று இந்தியாவில் காங்கிரஸின் பலவீனமான ஆட்சி இல்லை. இந்தியாவில் மோடியின் வலுவான அரசு உள்ளது. இந்தியா யாரையும் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் பயமுறுத்த முயற்சிக்கும் யாரையும் அதைவிடாது.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் ஆக இந்தியா மாறி உள்ளது. இன்று இந்தியாவின் அந்தஸ்தும் மரியாதையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு மோடி கூறினார். இந்தியா கூட்டணிக்கு பயங்கரமான நோய்கள் உள்ளன. அந்த கூட்டணி மிகவும் வகுப்புவாதமானது. மிகவும் சாதி வெறியுடன் உள்ளது. இது புற்றுநோயை விட அழிவுகரமானது. வாக்கு வங்கிக்காக சமூகத்தை பிளவுபடுத்துவதே அவர்களின் இலக்கு என சாடினார்.மோடி உயிருடன் இருக்கும் வரை எவ்வளவு முயற்சி செய்தாலும் ஏழை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது எனக் கூறினார்.
SOURCE :Dailythanthi