இந்தியா- வங்காளம் இடையேயான விரைவு ரயில் சேவை துவங்கியதன் சுவாரஸ்ய பின்னணி
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையிலான விரைவு ரயில் சேவை கடந்த காலங்களில் இருந்து இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
இந்தியாவின் நட்பு நாடுகளான பங்களாதேஷிற்கு ரயில் மூலமாக பயணத்திற்கான விரைவு ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் தீவிரமாக இருந்ததன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரயில் சேவை குறிப்பாக பயணிகளுக்கான சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு குறிப்பாக இந்தியா மக்கள் அதிகளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு தற்போது நோய்தொற்று அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொற்று நோய் காரணமாக இந்திய மற்றும் வங்காளதேசம் இடையிலான மூன்று ரயில் சேவைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டு இருந்தது மேலும் அவற்றை கட்டுக்குள் உள்ளது தற்போது இன்று முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். எனவே கொல்கத்தா டாக்கா இடையே மற்றும் கொல்கத்தா மைத்திரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், கொல்கத்தா குல்னா, கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது என்று கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவங்கப்பட்டது பல்வேறு பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் இந்த ரயில் சேவை துவங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு டிக்கெட்கள் விற்றுத் இருந்தாகவும் கூறப்படுகிறது.
Input & Image courtesy: Malaimalar news