இஸ்லாமுக்கு மதம் மாறிய இந்தியப்பெண், தீவிரவாதத் தொடர்புகளுக்காக பங்களாதேஷில் கைது.! #India #Bangladesh #JMB
இஸ்லாமுக்கு மதம் மாறிய இந்தியப்பெண், தீவிரவாதத் தொடர்புகளுக்காக பங்களாதேஷில் கைது.! #India #Bangladesh #JMB

ஜமாஅத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷின் (JMB) உறுப்பினராக இருந்த குற்றத்திற்காக 25 வயது பெண்ணை, பங்களாதேஷின் டாக்கா காவல்துறையின் பயங்கரவாத மற்றும் நாடுகடந்த குற்றப் (CTTC) பிரிவு, வெள்ளிக்கிழமையன்று கைது செய்தது. விசாரணையின் போது, அந்தத் பெண்ணின் பெயர் ஆயிஷா ஜன்னத் மொஹான் என்பதும் ,அவர் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறினார் என்பதும் தெரிய வந்துள்ளது.
அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், பிரக்யா டெப்நாத், அவர் கொல்கத்தாவை ஒட்டியுள்ள ஹூக்லி மாவட்டத்தின் தனியாகாலி காவல் நிலையத்தின் கீழ் வரும் பாசிம் கேஷாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். உயர் நிலைப் பள்ளியில் அவர் படிக்கும் போது, அவருக்கு ஒரு முஸ்லீம் பெண் தோழி இருந்துள்ளார். அவரின் மூலமாக 2009ல் இஸலாமிற்கு ரகசியமாக மதம் மாறினார் பிரக்யா.
ரகசியமாக, ஒரு முஸ்லீம் பெயரை ஏற்றுக்கொண்டார் (ஆயிஷா ஜன்னத் மொஹான்). மேலும் அவரது சொந்த மாவட்டத்திலுள்ள சலாபி மதகுருக்களால் இஸ்லாமில் தீவிரமயமாக்கப்பட்டார்.சில வருடங்களுக்கு முன்பு, JMB தீவிரவாத இயக்கத்தின் பெண்கள் பிரிவில் சேர்ந்தார். அந்தப் பிரிவின் தலைவர் அஸ்மானி கட்டூன் அல்லது 'போண்டி ஜிபோன்' அவரை ஆட்சேர்ப்பு செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆயிஷாவின் பணி, இந்துப் பெண்களை இஸ்லாமுக்கு மதம் மாற்றி சலாபி மத குருக்களுடன் அறிமுகப்படுத்தி, JMBயில் இணைப்பதாகும். இந்தத் தீவிரவாத அமைப்பு வங்காளத்தில் பரவி உள்ளது.
தி டெய்லி ஸ்டார் செய்திகளில், CTTC உதவி கமிஷனர் இம்ரான் ஹொசைன் கூற்றுப்படி, ஆயிஷா ஒரு போலி பங்களாதேஷ் பிறப்புச் சான்றிதழையும், அதன் மூலம் பங்களாதேஷ் தேசிய அடையாள அட்டையையும் பெற்றார். இந்த போலி ஆவணங்கள் தவிர, ஒரு இந்திய பாஸ்போர்ட் அவர் வசம் இருந்து மீட்கப்பட்டது. ஆயிஷாவிற்கு நிதி சேர்க்கும் வேலையும் தரப்பட்டது. சமீபத்தில் பங்களாதேஷ் குடிமகனான அமீர் ஹொசைன் சதாமை தொலைபேசி வாயிலாகத் திருமணம் செய்து கொண்டார். (கணவர் ஓமனில் வசிக்கிறார்). அவருடைய அறிவுறுத்தலின் பேரில், ஆயிஷா பங்களாதேஷில் கடந்த ஆகஸ்டில் இருந்து வசித்து வருகிறார்.
அவர் டாக்காவில் வசித்து வந்தார் மற்றும் நகரத்தின் கெரானிகஞ்ச் மற்றும் நாராயங்கஞ்ச் பகுதிகளில் சில மதரஸாக்களில் மத ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். அவரின் முக்கியப் பணி, இளஞ்சிறுவர்களை அடையாளம் கண்டு மூளை சலவை செய்து, தீவிரவாத இயக்கங்களில் சேர்த்து விடுவது.
இந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி CTTCயால் ஆயிஷாவின் வழிகாட்டியான அஸ்மானி கதுன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் மதரஸாக்களில் கற்பிப்பதை நிறுத்திவிட்டு, இளைஞர்களை சென்றடைய JMB யின் சமூக ஊடக தளங்களில் பணியாற்றத் தொடங்கினார்.
கடந்த சில மாதங்களாக அவர் சில இளம் சிறுமிகளை வெற்றிகரமாக JMBயில் சேர்த்து விட்டார். அவர் சட்டவிரோதமாக சில முறை சர்வதேச எல்லையை கடந்திருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர் மற்றும் விசாரணையின் போது, மோகோனா அமைதியாகவும், நிலையாகவும் இருந்ததாகவும், எந்தவிதமான பயத்தின் அறிகுறிகளும் காட்டவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்தப் பெண் மிகவும் மூளைச்சலவை செய்யப்பட்டதையும், பயங்கரவாத அமைப்பிற்கு விசுவாசமாக உள்ளார் என்பதையும் காட்டுவதாகக் கூறுகிறார்கள்.
முஸ்லீம்களை திருப்திப்படுத்தும் கொள்கையைத் தொடர்ந்து இடது முன்னணியும் பின்னர் வங்காளத்தில் திரிணாமுலும் பின்பற்றுவதால, தீவிர இஸ்லாமிய மதகுருமார்களுக்கு மாநிலத்தில் சுதந்திரமாக செயல்பட அனுமதி கிடைத்துள்ளது. தீவிரமான மற்றும் பிற்போக்குத்தனமான சலாபி மதகுருமார்கள் வங்காளம் முழுவதிலும் மத்திய கிழக்கு நாடுகளின் நிதியுதவியுடன் ஆயிரக்கணக்கான மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை அமைத்துள்ளனர்.
JMB யின் பல பயங்கரவாதிகளுக்கு எதிராக பங்களாதேஷில் ஷேக் ஹசீனா அரசாங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடுக்குமுறையைத் தொடங்கினர், இதனால் பலர் வங்காளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களில் பலர் அங்கிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Source: The Daily Star ; Swarajya