Kathir News
Begin typing your search above and press return to search.

ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில்,  பாகிஸ்தானை வறுத்தெடுத்த இந்தியா

ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில்,  பாகிஸ்தானை வறுத்தெடுத்த இந்தியா

ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில்,  பாகிஸ்தானை வறுத்தெடுத்த இந்தியா
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Sept 2019 11:09 AM IST


ஐக்கிய நாடுகளின் 74 வது பொது சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு பதில் அளிக்க இந்தியா சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியா சார்பில் கடுமையான பதில் அளிக்கப்பட்டது.


இம்ரான் கானின் முழு உறையும் வெறுப்பை தூண்டுவதாக இருந்தது. அவர் பயன்படுத்திய பல வார்த்தைகள் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக இருந்தது. உலக நாடுகளின் துணை இல்லாமல், பாகிஸ்தான் பலவீனமாக இருப்பதையே அவரின் உரை காட்டியது. அவரின் அணு ஆயுதத்தை பற்றிய பேச்சு உலக நாடுகள் விரும்பவில்லை.


சில கடுமையான கேள்விகளை இந்தியா சபையில் முன்வைத்தது



  1. ஐக்கிய நாடுகள் வெளியிட்ட பட்டியலின் படி 130 தீவிரவாதிகள் மற்றும் 25 தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பது ஏன் ?
  2. உலகிலேயே அல் குவைதா தீவிரவாதிகளுக்கு அரசின் சார்பில் பென்ஷன் அளிக்க கூடிய ஒரே நாடு பாகிஸ்தான் தான். ஏன் அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் ?
  3. பாகிஸ்தானின் தலையாய வங்கியான ஹபீப் வாங்கி பயங்கரவாதத்திற்கு பண உதவி செய்ததால் பல கோடி டாலர்கள் அபராத்திற்கு உட்பட்டு மூடப்பட்டது. இதற்கு பதில் ?
  4. பாகிஸ்தானின் நிதி அமைப்பு பல விதி மீறல்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
  5. ஒஸாமாவிற்கு காப்பாற்ற நினைத்த பாகிஸ்தான், நியூ யார்க் நகரின் முன் மறுப்பு தெரிவிக்க தயாரா ?


1947 ஆம் ஆண்டு 23% மாக இருந்த சிறுபான்மையினரின் எண்ணிக்கை 3% ஆகியுள்ளது. ஹிந்து, சீக்கியர், புத்த, ஜெயின் போன்ற பிரிவை சார்ந்த மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தது உலகறிந்தது. இந்தியாவிற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் இல்லை என்று உரையில் இந்தியா கூறியது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News