கொரோனாவிலிருந்து மீண்டெழுவதில் இந்தியா தான் உலகிலேயே டாப் - உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கொரோனாவிலிருந்து மீண்டெழுவதில் இந்தியா தான் உலகிலேயே டாப் - உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரு மில்லியனுக்கு பேருக்கு, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அடிப்படையில் பார்க்கும் போது, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக சுகாதார அமைப்பின், 2020 ஜூலை 6 தேதியிட்ட சூழல் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 505.37 மட்டுமே. அதே சமயத்தில் உலக சராசரியோ 1453.25 ஆகும்.
ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது சிலி நாட்டில் 15,459.8 ஆகும். இது பெரு நாட்டில் 9070.8 ஆகவும், அமெரிக்காவில் 8560.5, பிரேசிலில் 7419.1, ஸ்பெயினில் 5358.7 ஆகவும் உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் சூழல் அறிக்கையானது, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு மிகக் குறைந்த இறப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை 14.27 மட்டுமே. அதே நேரத்தில், உலக சராசரி இதை விட 4 மடங்கு அதிகமாக, அதாவது 68.29 ஆக உள்ளது.
பிரிட்டனில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை 651.4 ஆகும். இது ஸ்பெயினில் 607.1, இத்தாலியில் 576.6, பிரான்சில் 456.7, அமெரிக்காவில் 391 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.