Kathir News
Begin typing your search above and press return to search.

ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்ட சக்தி வாய்ந்த T-90 பீஷ்மா பீரங்கி இந்திய எல்லையை நோக்கி விரைகிறது - சிலிர்த்துப்போன சீனா!

ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்ட சக்தி வாய்ந்த T-90 பீஷ்மா பீரங்கி இந்திய எல்லையை நோக்கி விரைகிறது - சிலிர்த்துப்போன சீனா!

ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்ட சக்தி வாய்ந்த T-90 பீஷ்மா பீரங்கி இந்திய எல்லையை நோக்கி விரைகிறது - சிலிர்த்துப்போன சீனா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2020 7:29 AM GMT

எல்லை கட்டுப்பாட்டு பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் சீனா உடனான வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் உலகின் சக்தி வாய்ந்த பிரங்கியாக கருதப்படும் டி -90 பீஷ்மா பீரங்கியை கிழக்கு லடாக் பிராந்தியத்தில் நிறுத்தியுள்ளது.

சீனா முன்வைக்கும் எந்தவொரு சவாலுக்கும் பதிலளிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய இராணுவம் டி -90 பீஷ்மா பீரங்கியை நிறுத்தியது. போர் போன்ற சூழ்நிலைகளில், சீன-இந்தியா எல்லையில் அத்துமீறல் இனி பொறுத்துக் கொள்ளப்படாது என்ற தெளிவான செய்தியையும் இந்தியா வழங்கியுள்ளது.

முன்னதாக சீனா தனது கவச வாகனங்களை எல்லைக்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளதால், மே மாதத்தில் சீனாவுடன் எல்லை பதற்றம் தொடங்கியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் T-90 பீஷ்மா பீரங்கி ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது. ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும். 6 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கக்கூடியதுமாகும்.

குறிப்பாக, டி -90 பீஷ்மா பீரங்கி மணல் தரையிலும் வேகமாக நகரும். Demchouk மற்றும் Spangur Gap இடைவெளியில் இருந்து 50 கி.மீ தூரத்தில் பகுதிகளை எளிதில் குறிவைக்க முடியும். இந்தியாவிடம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டி 90 பீரங்கிகள் உள்ளன. சீனாவிடம் 3500 பீரங்கிகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News