உலகுக்கு இந்தியா அளித்தது புத்தம்தான் ...யுத்தம் அல்ல !! ஐநா சபையில் மோடியின் ருசிகர பேச்சால் கரகோஷம்!!
உலகுக்கு இந்தியா அளித்தது புத்தம்தான் ...யுத்தம் அல்ல !! ஐநா சபையில் மோடியின் ருசிகர பேச்சால் கரகோஷம்!!
By : Kathir Webdesk
பிரதமர் மோடி நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபை 74 வது அமர்வில் உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில் “ உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் கை கோர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
மேலும் அவர் தனது உரையில் “ உலகெங்கும் ஐநா செய்து வரும் அமைதி காக்கும் பணிகளில் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான பணிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை இந்தியா தொடரும் அதே சமயம் இந்தியா உலகுக்கு புத்தத்தை ( புத்தரின் அஹிம்சை வழி ) கொடுத்ததே தவிர யுத்தத்தை அல்ல என்றும் கூறினார். அதாவது உலகிற்கு இந்தியா அமைதியைத்தான் போதித்துள்ளதே தவிர யுத்தத்தை அல்ல என்ற பொருள் படும் வகையில் அவர் அடுக்கு தொடரில் பேசியது சபையில் கரகோஷத்தை ஏற்படுத்தியது.
மேலும் அவர் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவை பற்றி குறிப்பிடுகையில் பாகிஸ்தானுடன் நல்ல நட்புடன் திகழ வேண்டுமென்பதுதான் இந்தியாவின் ஆசை.. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான வலிமையான நடவடிக்கைகளை எடுக்காதவரை அது நிறைவேறாது என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.
This is a Translated Article From Republic World