சிறுதானியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!
மத்திய அரசு சிறு தானிய உற்பத்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் Dr. ஜெய்சங்கர் தெரிவித்து இருக்கிறார்.
By : Bharathi Latha
சர்வதேச உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிறு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கப்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்து இருக்கிறார். தானியங்களின் பயன்பாட்டை சர்வதேச அளவில் அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் கோரிக்கையை 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அதற்கான முன்னெடுப்பு பணிகள் குறித்து டெல்லியில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிற்காக பல நாடுகளின் தூதர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்பொழுது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இது பற்றி கூறுகையில், பருவநிலை மாற்றம், கொரோனா தொற்று பரவல், உக்ரைன்- ரஷ்யா போர் ஆகியவை காரணமாக சர்வதேச உணவு பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டது பிரச்சனைக்கு முக்கிய காரணம். உலகின் பெரும் கோதுமை ஏற்றுமதியாளராக திகழ்ந்த உக்ரைன் போர் ஏற்பட்டதால் சர்வதேச உணவு பாதுகாப்பு பாதிக்கப்பட்டது. பருவநிலை மாற்றத்தால் உணவு தானியங்கள் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சர்வதேச உணவு பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சர்வதேச உணவு பாதுகாப்பில் சிறு தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கும். அவற்றை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளையும் சிறுதானியங்கள் மூலமாக தீர்க்க முடியும். உலகம் முழுவதும் 130 நாடுகளில் சிறு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறுதானிய உற்பத்தி செய்யும் நாடுகளின் அதன் மூலமாகவும் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மற்ற நாடுகளுக்கும் உதவ முடியும் என்று நோக்கில் செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamani