மோடி அரசின் சாதனைகளால் இந்தியா அசாதாரண வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது- அமெரிக்க மந்திரி ஆண்டனி பிளிங்கன்!
இந்தியா அசாதாரண வெற்றி வரலாறு படைத்துள்ளது என்று மோடி அரசின் சாதனைகளை அமெரிக்க மந்திரி பாராட்டியுள்ளார்.
By : Karthiga
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் இந்தியாவை நீங்களும் அமெரிக்காவும் எப்படி பார்க்கிறீர்கள் ?என்று கேட்கப்பட்டது .அதற்கு ஆண்டனி லிங்கன் கூறியதாவது :-
இந்தியா அசாதாரண வெற்றி வரலாறு படைத்துள்ளது .பிரதமர் மோடி தனது மேற்பார்வையில் படைத்த குறிப்பிடத்தக்க சாதனைகள், எண்ணற்ற இந்தியர்களுக்கு பலன் அளித்துள்ளன. அவர்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு புதிய உயரத்தையும் இடத்தையும் அடைந்துள்ளது .அதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் இந்திய பிரதமர் மோடியும் திட்டமிட்டு எடுத்த முயற்சிகளை காரணம்.
அதே சமயத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஜனநாயகம் உரிமைகள் ஆகியவை பற்றி பேச்சுதான் முக்கிய இடம் பிடிக்கும். ஜனாதிபதியாக பதவியேற்ற போது ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றிய அடிப்படை கவலைகளை எங்கள் வெளியுறவு கொள்கையில் மீண்டும் புகுத்த விரும்பினோம். அதன்படியே செய்தோம். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI