Kathir News
Begin typing your search above and press return to search.

கடற்படை கப்பல் பழுது பார்ப்பில் உலக நாடுகளை கவனம் ஈர்த்த இந்தியா!

கடற்படை கப்பல் பழுது பார்ப்பில் உலக நாடுகளின் கவனத்தை எல்லாம் இந்தியா தன் பக்கம் ஈர்த்துள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் முக்கிய நகர்வாக கருதப்படுகிறது.

கடற்படை கப்பல் பழுது பார்ப்பில் உலக நாடுகளை கவனம் ஈர்த்த இந்தியா!
X

KarthigaBy : Karthiga

  |  9 April 2024 11:55 PM IST

கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையில் உலகின் வலிமை மிகுந்த நாடாக சீனா உருவெடுத்து வருகிற நிலையில் சீனாவின் அண்டை நாடான இந்தியாவுக்கு அமெரிக்க கப்பல் பழுதுபார்ப்பு பணிக்காக வந்தது பெரும் கவனம் ஈர்த்தது. முக்கிய ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் எல் அண்டு டி நிறுவனத்துக்கும் இடையே மாஸ்டர் பழுது பார்ப்ப ஒப்பந்தம் கையெழுத்தானது .இதன்படி அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் ஐந்தாண்டுகளுக்கு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க கடற்படை கப்பலான யூ.எஸ். என். எஸ் சால்வார் காட்டுப்பள்ளி தளத்துக்கு வந்தது. அதேபோல் பிரிட்டனுடன் 2022-ல் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது பிரிட்டன் கப்பல்களான ஆர்.எப்.ஏ.அர்க்கஸ் , ஆர். எப்.ஏ லைம்பே ஆகிய இரண்டு கப்பல்கள் பராமரிப்பு பணிக்காக சென்னை வந்துள்ளன. பிரிட்டனின் கடற்படை கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் நிறுவனத்தில் பழுது பார்க்கப்படுவது இதுவே முதல் முறை.

இந்தோ-பசிபிக் கடற் பகுதிகளில் கடற்கொள்ளை ,ஏவுகணை தாக்குதல்,டிரோன் தாக்குதல் உள்ளிட்டவை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிற நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இப்பகுதியில் கூடுதல் கப்பல்களை ரோந்து பணிக்கு கொண்டு வந்தபடி உள்ளன. இந்த கப்பல்களில் பழுது ஏற்பட்டால் சொந்த நாட்டுக்கு சென்று பழுது பார்ப்பது என்பது நேர விரையம் மட்டுமல்ல செலவு மிகுந்ததும் கூட .

இதே பணியை இந்தியாவில் மேற்கொள்வது என்பது பலவிதங்களில் வசதியானது .செலவு குறைவு .இதனால் அந்நாடுகள் தங்கள் கப்பல்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பபடிக்கு இந்தியாவை தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது .இதற்கு பின்னால் அரசியல் காரணமும் உண்டு. எளிமையான கடற்படையைக் கொண்டிருக்கும் சீனா தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவும் ரஷ்யாவும் கூட்டாளிகள் அவர நாடுகள் கடற் பரப்பில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்துவது அமெரிக்காவுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தனது கடற்படையை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தென்சீன கடல் பகுதிக்கு அருகே இந்தியா அமைந்துள்ளதால் இங்குள்ள கப்பல் கட்டும் தளங்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அமெரிக்கா தன் கடற்படை இருப்பை சீனாவுக்கு தொடர்ந்து உணர்த்திக் கொண்டிருக்க முடியும் என்று கூறுகின்றனர். இந்தியாவுக்கு என்ன பலன்? இந்தியா தனது தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைப்பதோடு உள்நாட்டு சேவைகளை தயாரிப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேற்குலக நாடுகள் தங்கள் கப்பல் பழுது பார்ப்புக்கு இந்தியாவை தேர்வு செய்வது என்பது இந்தியாவின் வளர்ச்சி பாதையில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. தற்போது கப்பல் துறை சார்ந்து இந்தியாவுலின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News