பூட்டானின் வளர்ச்சியில் நம்பகமான பங்குதாரராக திகழும் இந்தியா - பிரதமர் மோடிக்கு பூட்டான் பிரதமர் பாராட்டு!
'பூட்டானுக்கு வாருங்கள்' என்று பூட்டான் பிரதமர் விடுத்த அழைப்பை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
By : Karthiga
அடுத்த வாரம் பூட்டானுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே நேற்று முன்தினம் வியாழக்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது அடுத்த வாரம் தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ஷெரின் டோப்கே அழைப்பு விடுத்தார். இதனை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடுத்த வாரம் பூட்டானுக்கு வரும் பிரதமர் மோடிக்கு பூட்டான் மன்னர் சார்பில் பன்னாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார். உள்கட்டமைப்பு மேம்பாடு ,இணைப்பு, எரிசக்தி, நீர்மின் ஒத்துழைப்பு மக்களிடையே பரிமாற்றம் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு கூட்டுறவின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
சிறப்பு தனித்துவமான இந்தியா - பூட்டான் நட்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். பூடானின் வளர்ச்சி முன்னுரிமைகளில் நம்பகமான மற்றும் மதிப்பு மிக்க பங்குதாரராக திகழும் இந்தியாவுக்கு பூட்டான் பிரதமர் தனது பாராட்டுகளை தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
SOURCE :Varalaru